For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கந்து வட்டி கொடுமையால் தீக்குளிப்பு சம்பவத்திலும் பிரதமர் துதிபாடும் தமிழிசை

கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்து 3 பேர் இறந்த சம்பவத்திலும் பிரதமரின் திட்டங்கள் குறித்து துதிபாடுவதற்கு தமிழிசை சௌந்தரராஜன் தவறவில்லை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பரிதாபம்! கந்து வட்டியின் கோரப்பசிக்கு கருகிய உயிர்கள்-வீடியோ

    சென்னை: கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து 3 உயிரிழந்த நிலையிலும் சைக்கிள் கேப்பில் பிரதமர் குறித்து துதிபாடும் செயலை தமிழிசை சௌந்தரராஜன் நிறுத்தவில்லை.

    நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள , காசிதர்மம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் . மதுசரண்யா, அட்சய பரணிகா ஆகிய இரண்டு குழந்தைகள், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தீக்குளித்தனர்.

     Tamilisai says about Usury interest self immolation incident

    இவர்கள் இதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அவர் இந்த கடனை திரும்ப கேட்டு மிரட்டி அதிக வட்டி கேட்டு வருவதாகவும் போலீஸாரிடம் சென்றுள்ளனர். போலீஸாரும் கடன் கொடுத்தவருகளுக்கே ஆதரவாக செயல்பட்டனராம்.

    ஆட்சியர் அலுவலகத்தில் 6 முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த அவர்கள் 4 பேரும் ஆட்சியர் அலுவலகத்திலேயே தீக்குளித்தனர். இதில் 70 சதவீதம் எரிந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் தாயும், இரு குழந்தைகளும் இறந்துவிட்டனர்.

    இசக்கி முத்துவுக்கு சிகிச்சை நடைபெறுகிறது. இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த உயிரிழப்புக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி என்று தெரிவித்துள்ள அவர், பிரதமரின் முத்ரா வங்கி திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். அந்த திட்டம் குறித்து பிரசாரம் செய்யும் வகையில் பேசியுள்ளார். பின்னர் கந்து வட்டியை ஒழிக்க பிரதமரின் எளிய கடன் திட்டத்தை பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

    இறப்பு சம்பவத்துக்கு இரங்கல் செய்தியிலும் தமிழிசை பிரதமரின் துதிபாடுகிறார் என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    English summary
    BJP State president Tamilisai Soundarrajan expresses her regret to the family who self immolates themselves for usury interest. In this sad news Tamilisai says about Central Government's Mudra Bank project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X