For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோயில்கள் கட்சிக்காரர்களின் கூடாரம் ஆனது திமுக ஆட்சியில்தான் - தமிழிசை

கோயில்களை தன் கட்சிக்காரர்களின் கூடாரம் ஆனது கழக ஆட்சியில்தானே? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு பாரம்பரிய கோவில்களை பராமரிப்பதில் அலட்சியம் காட்டுவதாக நேற்று மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதில் தரும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பாரம்பரியச் சின்னங்களான திருக்கோயில்களைப் பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டி, தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களைச் சிதைத்து வருவதை ஐ.நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Tamilisai slams Stalin

தொன்மைமிக்க திராவிடக் கட்டிடக் கலையின் புகழ்வாய்ந்த அடையாளங்களாக உயர்ந்து நிற்பவை தமிழகத்தில் உள்ள கோயில் கோபுரங்கள். தமிழக அரசின் இலச்சினையாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் இடம்பெற்றிருப்பதில் இருந்தே இதனை உணர முடியும்.

ஆனால், தமிழகத்தை ஆளுகின்ற அதிமுக அரசு அதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தமிழிசை கண்டனம்

மு.க.ஸ்டாலினின் அறிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கோயில்கள் கொடியவர்களின்கூடாரம் ஆனதாக வசனம் பேசி கோயில்களை தன் கட்சிக்காரர்களின் கூடாரம் ஆனது கழகஆட்சியில்தானே?கடவுள் சிலைகள்களவுகள்?யாரால் என்று கேட்டுள்ளார்.

கட்சிக்காரர்களுக்கு தானம்

தமிழக கோவில்களை சேதாரமாக்கியவர்கள் மீது நடவடிக்கை,ஸ்டாலின் கோரிக்கை?கோயில் நிலங்களை சொத்துக்களை தன் கட்சியினருக்கு தானம் செய்தது கழக ஆட்சி என்று பதிவிட்டுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

English summary
State BJP president Tamilisai Soundararajan said that Stalin’s comments on the state Hindu religious and charitable endowments for destroying ancient Dravidian architecture on the pretext of restoration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X