For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாமரை மலரவே இல்லை.. ஆனாலும் தமிழிசை நிறைந்துவிட்டார்.. இந்த கருத்து கணிப்பு முடிவை பாருங்க!

தாமரை மலரவே இல்லையென்றாலும் தமிழிசை நிறைந்துவிட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார்.. கடும் போட்டியில் 6 தலைவர்கள்

    சென்னை: தமிழிசை தெலுங்கானா பக்கம் போனாலும், நம்மால் ஏனோ அவரை இன்னமும் மறக்க முடியவில்லை. "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வாசகத்தை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பெருமை தமிழிசையையே சாரும்.

    என்ன செய்வீங்களோ தெரியாது.. இந்த முறை தாமரை தமிழிகத்தில் மலர்ந்தே ஆக வேண்டும் என்று அமித்ஷா எம்பி தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக பாஜகவிடம் சொல்லிவிட்டு சென்றார்.

    ஆனால் கடைசிவரை தாமரை நம்ம ஊரில் மலரவில்லை என்றாலும்கூட, மூச்சை பிடித்து கொண்டு ஓங்கி ஒலித்து சொல்லும் தமிழிசையின் இந்த வாசகம் மக்கள் மனதில் நிறைந்துவிட்டது என்பது இப்போது நிரூபணமாகி "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    நீங்க அடுத்த தலைவராகலாம்.. வானதிக்கு செம ஆதரவு.. எச். ராஜாவுக்கு பெருசா இல்லை!நீங்க அடுத்த தலைவராகலாம்.. வானதிக்கு செம ஆதரவு.. எச். ராஜாவுக்கு பெருசா இல்லை!

    சவால்கள்

    சவால்கள்

    "தமிழிசை என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன" என்பதுதான் நமது வாசகர்களிடம் எழுப்பப்பட்ட கேள்வி. அதற்கு "வெள்ளந்தி சிரிப்பு" என்பதற்கு 22.52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். "போர்க்குணம்" 4.84 சதவீதமும், "சவால்களை சமாளிப்பது" என்ற ஆப்ஷனுக்கு 10.84 சதவீதமும் வாக்களிக்கப்பட்டுள்ளது. "தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என்பதற்கு 56.51 சதவீதம் பேரும், "அவரது தமிழ்தான்" என்பதற்கு 5.29 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

    ஒளிவுமறைவு

    ஒளிவுமறைவு

    இதில் "வெள்ளந்தி சிரிப்பு" என்ற ஆப்ஷனுக்கு 22.52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளது உண்மையிலேயே பெரிய விஷயம். ஒரு அரசியல் கட்சி தலைவரின், அதிலும் தமிழகத்தில் அவ்வளவாக செல்வாக்கு இல்லாத ஒரு கட்சி தலைவரின் சிரிப்பினைகூட, மக்கள் கவனிக்க தவறவில்லை என்பதும், அந்த சிரிப்புக்கு பின்னால் எந்தவித ஒளிவுமறைவு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    தாமரை

    தாமரை

    அதேபோல, மலராத ஒரு தாமரையை கிட்டத்தட்ட மலர வைத்துவிட்டது போல ஒரு பிரமையை தமிழிசை ஏற்படுத்தி விட்டார். அதனால்தான் 56.51 சதவீத வாக்கு விழுந்துள்ளது. உண்மையிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் அதாவது தாமரை ஏற்கனவே மலர்ந்த மாநிலங்களில் இப்படி ஒரு வலுவான வாக்கு சதவீதம் விழுமா என்பது சந்தேகம்தான்.

    ஆதரவு

    ஆதரவு

    ஆனால் "சவால்களை சமாளிப்பது" என்ற ஆப்ஷனுக்கு 10.84 சதவீத வாக்கு குறைந்து விழுந்துள்ளது. இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதும். ஏனெனில் பாஜக தலைமையின் மக்கள் விரோத அறிவிப்புகளுக்கு தமிழிசை பெரிய அளவில் தன் எதிர்ப்பினை காட்டவே இல்லை. மத்திய அரசு பக்கம் ஆதரவு காட்டிய அளவுக்கு மக்கள் பக்கம் நிற்காததும், எந்தவிதத்திலும் பாஜக தலைமையை பகைத்து கொள்ளாத போக்கும்தான் மக்களை பாதித்திருக்க செய்கிறது.

    உண்மை

    உண்மை

    இது ஒன்றே ஒன்றுதான் தமிழிசையின் மீது குறையாகவும் தமிழகத்தில் நின்றுவிட்டது. மத்தபடி தமிழிசை போன்ற ஒரு விசுவாசம், உண்மை, கண்ணியம் மிக்க தலைவர் இந்த கால அரசியலில் கிடைப்பதும் நாம் கண்ணால் காண்பதும் அரியதுதான்.

    English summary
    Tamil one India takes surevey from readers about Tamilisai Soundarajans BJP Slogam Lotus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X