For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் 1800 அடியா தாண்டினார்? தமிழிசையின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 18ம்தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.

Tamilisai Soundararajan's controversial twitter status

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும். அந்த வகையில் ஒட்டுமொத்த தேசத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார் மாரியப்பன். அவரின் சாதனை பாராட்டி வாழ்த்துகள் குவிந்து வண்ணம் உள்ளன.

தமிழக அரசு ரூ.2 கோடி பரிசு தொகையும் மத்திய அரசு ரூ75 லட்சம் பரிசுத்தொகையும் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களிலும் மாரியப்பன் சாதனையை பாராட்டி அமிதாப் பச்சன், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதில், வேடிக்கை என்னவென்றால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் தனது வாழ்த்து பதிவில் தவறுதலாக 1.89 மீட்டர் என்பதற்கு பதிலாக 1800 அடியை தாண்டியற்கு பாராட்டுவதாக கூறியுள்ளார். இந்த பதிவை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தமிழிசை சவுந்திரராஜனை விமர்சித்து வருகின்றனர்.

இதுதான் தமிழிசையின் டுவிட்டர் பதிவு:

தற்போது ரியோ பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று தமிழகத்தின் பெருமையை உயர்த்திய மாரியப்பனுக்கு மனமார்ந்தபாராட்டுகள் என மற்றொரு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மாரியப்பன் தடம்பதித்ததை பாராட்டி இட்ட பதிவில் இருந்த தவறை சுட்டிக்காண்பித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி..மன்னிக்கவும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை பதிவு செய்துள்ளார்.

English summary
Tamilnadu bjp chief Tamilisai Soundararajan's controversial twitter status about gold medallist Thangavelu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X