For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வெள்ளத்திற்கு காரணமான மழையில் பாதி அளவு பெய்யுமாம்.. ரெட் அலர்ட் ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்கு மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை- வீடியோ

    சென்னை: வரும், 7ம் தேதி ஒரே நாளில் 25 செ.மீ வரை கன மழை தமிழகத்தில் பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    சென்னையில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரே நாளில் 50 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்து பெருவெள்ளத்திற்கு காரணமாக அமைந்தது.

    இந்த நிலையில், வரும் 7ம் தேதி, அதற்கு பாதி அளவிற்கு ஒரே நாளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    [தமிழகத்தில் 8-ஆம் தேதி வரை கனமழை... 4 மாநில மீனவர்களுக்கு எச்சரிக்கை!]

    பாதுகாப்பு ஏற்பாடு

    பாதுகாப்பு ஏற்பாடு

    மிக மிக கனமழை காரணமாக பேரிடர் ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் பிறப்பித்துள்ளது. ஒரே நாளில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும், அன்று மக்களை பாதுகாப்பாக இருக்க வைக்க அரசு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 25 சென்டி மீட்டர் மழை குறுகிய காலத்தில் கொட்டித்தீர்க்கும் என்பதுதான் இந்த எச்சரிக்கைக்கான காரணம்.

    தாம்பரம்

    தாம்பரம்

    இருப்பினும் இதுபோன்ற பேய் மழை என்பது தமிழகத்திற்கு புதிது கிடையாது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை தாம்பரத்தில் ஒரே நாளில் 50 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    சென்னை பெரு வெள்ளம்

    சென்னை பெரு வெள்ளம்

    இந்த மழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. நகரம் எங்கும் மின்சாரம் தடைபட்டது.

    அச்சம் வேண்டாம்

    அச்சம் வேண்டாம்

    இதன் பிறகு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபநாசம் பகுதியில் ஒரே நாளில் 45 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. எனவே இது போன்ற பெரு மழை என்பது தமிழகம் ஏற்கனவே எதிர்கொண்டது தான் என்பதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்பதே தனியார் வானிலை ஆய்வு நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.

    English summary
    Tamilnadu already has experience with heavy rain and flood so no need to panic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X