For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டி... காங்கிரஸை திமுக கழற்றிவிடுவதன் பின்னணி

Google Oneindia Tamil News

Recommended Video

    TN assembly elections 2021 | DMK to break with Congress

    சென்னை: சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்துடன்தான் காங்கிரஸ் கட்சியை இப்போதே திமுக கழற்றிவிடுகிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டணி மாற்றங்களுக்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டு வருகின்றன.

    திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் நீடிக்குமா? என்கிற கேள்வி அவ்வப்போது எழுவது உண்டு. இப்போது காங்கிரஸை திமுக கழற்றிவிடுவது உறுதியாகிவிட்டது.

    களைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு களைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு

    தனிப்பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள்

    தனிப்பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள்

    சட்டசபை தேர்தலில் அதிகமான இடங்களில் திமுக தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் தாம் முதல்வராக வேண்டும் என்பது ஸ்டாலின் வியூகம். இதை ஸ்டாலின் பொதுக்கூட்டங்களிலேயே பேசியும் இருக்கிறார்.

    சிறுத்தைகள் மதில்மேல் பூனை

    சிறுத்தைகள் மதில்மேல் பூனை

    இதனால்தான் உஷாரான விடுதலை சிறுத்தைகள் கட்சி மதில்மேல் பூனையாக காங்கிரஸ், அதிமுகவுடனும் தனி ஆவர்த்தனமாக நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறது. இப்போது காங்கிரஸ் கட்சிக்கு திமுக குட்பை சொல்லும் காலம் வந்துவிட்டது.

    காங்கிரஸுக்கு அதிக இடங்கள்

    காங்கிரஸுக்கு அதிக இடங்கள்

    சட்டசபை தேர்தலில் காங்கிரஸை சுமந்தால் அக்கட்சிக்கும் கணிசமான இடங்களை ஒதுக்க நேரிடும்; காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான இடங்களை ஒவ்வொரு தேர்தலிலும் ஒதுக்கப்படுவதை ஒவ்வொரு முறையும் வேண்டா வெறுப்புடனேயே ஸ்டாலின் உள்ளிட்டோர் ஏற்று வந்தனர்.

    திமுகவின் முன்னோட்டம்

    திமுகவின் முன்னோட்டம்

    இம்முறை நிச்சயம் காங்கிரஸுக்கு கூடுதல் இடங்களை திமுக ஒதுக்கப் போவதும் இல்லை. ஆகையால் தேர்தல் நேரத்தில் கூட்டணியில் சலசலப்பு என்கிற செய்தியை விரும்பாத திமுக இப்போதே அதற்கான முன்னோட்டத்தை தொடங்கிவிட்டது.

    கூட்டணிகளில் மாற்றங்கள்?

    கூட்டணிகளில் மாற்றங்கள்?

    இன்னொருபக்கம் பாஜக, அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. கூட்டணியில் மாற்றம் வரலாம் என அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். இன்னும் வரும் நாட்களில் அரசியலில் எத்தனை திருப்பங்கள் அரங்கேறுமோ?

    English summary
    DMK want to break alliance with the Congress ahead of Tamilnadu Assembly Elections 2021, sources said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X