For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலை முன்பே ரத்து செய்திருந்தால் பணம், மனித சக்தி வீணாகியிருக்காது: சொல்வது தமிழிசை!

ஆர்கே நகர் இடைத் தேர்தலை முன்பே ரத்து செய்திருந்தல் பணமும் மனித சக்தியும் வீணாகி இருக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தேர்தலை முன்பே ரத்து செய்திருந்தல் பணமும் மனித சக்தியும் வீணாகி இருக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆர்கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதையடுத்து தேர்தல் ஆணையம் அந்த தொகுதிக்கு 12ஆம் தேதி நடைபெற இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் சவுந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Tamilnadu BJP leader Tamilisai welcomes cancelling the RK Nagar by poll

பணவிநியோகம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ள நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேர்மையாக தேர்தல் நடைபெறாவிட்டால் தேர்தலை நடத்தி எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்..

இடைத்தேர்தல் ரத்து விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தமிழிசை கூறினார். இது மாற்றத்திற்கான அறிகுறி என்றும் அவர் தெரிவித்தார்.

பணப்பட்டுவாடவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இல்லையெனில் தேர்தலை முன்பே ரத்து செய்திருந்தால் பணம், மனித சக்தி வீணாகியிருக்காது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

English summary
Tamilnadu BJP leader Tamilisai welcomes cancelling the RK Nagar by poll. If the election commission cancels it in the bigning stage the time and money would have saved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X