For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அந்த 5 அறிவிப்புகள்.. மிக முக்கிய திட்டங்களை வெளியிட்ட அதிமுக.. 2021ல் கோட்டையை பிடிக்க ஸ்கெட்ச்!

2021 தமிழக சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தும் வகையில் இன்றைய பட்ஜெட்டில் மிக முக்கியமான ஐந்து அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu Budget 2020 | கல்வி முதல் விவசாயம் வரை அதிமுக அரசின் 2020-21 தமிழக பட்ஜெட்

    சென்னை: 2021 தமிழக சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தும் வகையில் இன்றைய பட்ஜெட்டில் மிக முக்கியமான ஐந்து அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

    மத்திய அரசு பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு பட்ஜெட்டை தொடர்ந்து இன்று காலை துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 10வது முறையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    "இது பாமக பட்ஜெட்".. முதல் ஆளாக ட்வீட் போட்டு.. அதிமுகவை சூப்பராக கூல் செய்த டாக்டர் ராமதாஸ்!

    விவசாயம் எப்படி

    விவசாயம் எப்படி

    உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தை விரிவு படுத்த 400 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருத்திய நெல் சாகுபடி விரிவுபடுத்தப்படும். 11.1 லட்சம் ஏக்கருக்கு நெல் விதைப்பு டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும். நெல், சிறுதானியம், கரும்பு சாகுபடி உயர திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    மானியம் என்ன

    மானியம் என்ன

    இதற்கான மானியங்கள் அளிக்கப்படும். திருத்திய நெல் சாகுபடி 27.18 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும். டெல்டா மாவட்டங்களை குறி வைத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக டெல்டா மாவட்டங்களுக்கு நற்செய்தியாக, அப்பகுதி வேளாண் பாதுகாப்பு மையமாக அறிவிக்கப்பட்டது. வேளாண் துறைக்கு 11894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது டெல்டாவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

    பெண்கள் முக்கியம்

    பெண்கள் முக்கியம்

    தற்போது அதேபோல் மீண்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்டாவில் அதிமுக லோக்சபா தேர்தலில் பெற்ற தோல்வியை சரிக்கட்ட இது உதவும் என்கிறார்கள். அதேபோல் இன்னொரு பக்கம் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிர்பயா நிதி மூலம் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மகப்பேறு உதவி திட்டத்திற்கு 925 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இதன் மூலம் பெண்களின் வாக்குகளை கவர அதிமுக திட்டமிட்டுள்ளது.

    மதம்

    மதம்

    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் பழுதுபார்த்தல் & மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதியுதவி ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 60 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்று மதத்திலும் ஈடுப்பாடு கொண்ட மக்களை கவரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    தமிழ் வளர்ச்சி

    தமிழ் வளர்ச்சி

    தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கீழடியில் தொல்பொருள் ஆய்வுக்கு ரூ 12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. தமிழ் வளர்ச்சி துறை இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பற்றுக்கொண்ட மக்களின் வாக்குகளை கவரும் வகையிலும், திமுகவின் தமிழ் பற்று என்ற ஆயுதத்தை உடைக்கும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    நடுத்தர மக்கள்

    நடுத்தர மக்கள்

    கிராம உள்ளாட்சி வளர்ச்சிக்கு ரூ.6754 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ64,208.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நகர்ப்புற திட்டத்தின் கீழ் 1.12 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் வாக்குகளை கவரும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

    English summary
    Tamilnadu Budget 2020: AIADMK Govt announces 5 Important schemes for 2021 assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X