For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் போடத் தயாராகிறது எடப்பாடி அரசு.. இன்று கேபினட் மீட்டிங்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளது. மாலை 4.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

Tamilnadu Cabinet meeting today

இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. தமிழக சட்டசபையில் விரைவில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இது தொடர்பான விவாதிக்கவும் ஒவ்வொரு துறைகளிலும் அறிவிக்கப்படவுள்ள சிறப்புத் திட்டங்கள், தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அரசியல் ரீதியான விவகாரங்கள் ஆகியவை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றப் பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பதாலும், விரைவில் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாலும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இன்று நடக்க உள்ள கூட்டத்திற்கு பின்னரே என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது தெரியவரும்.

English summary
TN CM Edapadi Palanisamy holds Cabinet meeting today 4.30 pm
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X