For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பகவத் கீதையை மனதில் நிறுத்தி மகிழ்வுடன் வாழ வேண்டும்.. கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்வர் வாழ்த்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

Tamilnadu CM Edappadi Palanisamy wishes for Krishna Janmashtami

பகவத் கீதை மூலம் மனித வாழ்க்கையின் நெறியினை உலகுக்கு உணர்த்திய பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ண ஜெயந்தி திருநாளில், பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, மகிழ்வுடனும் வாழ வேண்டுமென்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க நாளை முதல் திங்கள்கிழமை வரை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தமிழ் காலண்டர்படி நாளை மறுநாள் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தியாகும்.

English summary
Tamilnadu CM Edappadi Palanisamy wishes people on the occation of Krishna Janmashtami 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X