For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு!

திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரண நிதியை அரசு அறிவித்துள்ளது

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் 84 திட்டங்களை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    சென்னை : திருச்சி திருவெறும்பூரில் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரண நிதியை அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது : தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, சூரமங்கலத்தை சேர்ந்த ராஜா என்பவர் 7.3.2018 அன்று திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், நிற்காமல் சென்ற ராஜாவின் வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார்.

    Tamilnadu CM Palanisamy announced Rs. 7 lakhs compensation for Usha family

    இருசக்கரவாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ராஜா என்பவரின் மனைவி உஷா பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த உஷா குடும்பத்தினரின் நிலையை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரணை நிதியில் இருந்து வழங்க உத்தரவிடுகிறேன். எனது உத்தரவின் பேரில் திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணையின் முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் குறிப்பட்டுள்ளார்.

    English summary
    Tamilnadu CM Palanisamy announced Rs. 7 lakhs fund for Usha family, a pregnant lady who was killed last night because of traffice police inspector.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X