For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செவ்வாய்க்கு போன அதே டெஸ்லா கார்.. எலோன் மஸ்க் நிறுவனத்திற்கு சென்ற முதல்வர் பழனிச்சாமி.. அட செம

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்காவில் உள்ள டெஸ்லா கார் உற்பத்தி மையத்தை இன்று பார்வையிட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Tamilnadu CM Palanisamy's went to Tesla Factory

    சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்காவில் உள்ள டெஸ்லா கார் உற்பத்தி மையத்தை இன்று பார்வையிட்டார்.

    முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மொத்தம் 3 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரின் இந்த பயணம் செப்டம்பர் 10ம் தேதி வரை நீடிக்கும்.

    தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

     அந்த 15 நிமிடம்தான் முக்கியம்.. சந்திரயானுக்கு காத்திருக்கும் திக் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம் அந்த 15 நிமிடம்தான் முக்கியம்.. சந்திரயானுக்கு காத்திருக்கும் திக் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம்

    டெஸ்லா கார்

    டெஸ்லா கார்

    இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதல்வர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெஸ்லா கார் உற்பத்தி மையத்தை பார்வையிட்டார். டெஸ்லா கார் என்பது மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து பேட்டரி மூலம் இயங்க கூடிய கார் ஆகும். இன்று காலை அதை தலைமை தொழிற்சாலைக்கு சென்று முதல்வர் பார்வையிட்டார்.

    மின்சாரம்

    மின்சாரம்

    தமிழகத்தில் எலக்ட்ரானிக் கார்களை அதிகம் பயன்படுத்தவும், மின்சார பேட்டரி பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 30 எலக்ட்ரிக் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு படியாக தற்போது டெஸ்லா கார் தொழிற்சாலையை முதல்வர் பார்வையிட்டு இருக்கிறார்.

    பேட்டரி

    பேட்டரி

    டெஸ்லா கார், பேட்டரி மூலம் இயங்க கூடிய கார்களில் உலகில் முதன்மையான காராக இருக்கிறது. அதேபோல் இதன் நிறுவனர் எலோன் மஸ்க் உலகில் முக்கியமான தொழில் அதிபராக இருக்கிறார். இவர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்பேஸ் எக்ஸ்

    ஸ்பேஸ் எக்ஸ்

    இதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்தான் கடந்த வருடம் தனது டெஸ்லா காரை செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பியது . தற்போது அதே டெஸ்லா ரோட்ஸ்டார் செர்ரி கலர் கார் மாடலை தமிழக முதல்வர் பழனிச்சாமி சென்று பார்வையிட்டுள்ளார். டெஸ்லா கார் நிறுவனம் இதனால் தமிழகத்தில் முதலீடு செய்யுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Tamilnadu CM Palanisamy's went to Tesla Manufacturing Factory in USA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X