For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம்: அய்யாக்கண்ணு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு போராடுவோம் என தமிழக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

நெல்லை : காவிரி விவகாரத்தில் தீர்வு எட்டப்படாவிட்டாம் தமிழக விவசாயிகள் பிரதமர் வீட்டின் முன்பு போராடுவோம் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்க தலைவர் அய்யாக்கண்ணு நெல்லையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் மாநிலம் முழுவதும் தடை செய்யக்கோரி குமரி முதல் கோட்டை வரையிலான பேரணி நடந்து வருகிறது.

 Tamilnadu Farmers will protest for Cauvery issue

விரைவில் சென்னையை அடைந்ததும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக மனு கொடுக்க உள்ளோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய ஆபத்துக்குள்ளாவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கப்பார்க்கிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக விவசாயிகள் டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பு போராடுவோம் என்று அவர் தெரிவித்தார்.

English summary
Tamilnadu Farmers will protest for Cauvery issue says Ayyakannu. He also added that Genetically transferred seeds and vegetables will kill younger generation Soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X