For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரும் அவஸ்தைக்கு பின் சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள்.. உற்சாகத்தில் உறவினர்கள்

ஈரானில் கடந்த 7 மாதங்களாக தவித்த தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈரானில் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் நாடு திரும்பினார்- வீடியோ

    சென்னை: ஈரானில் கடந்த 7 மாதங்களாக தவித்த தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்.

    தமிழக மீனவர்கள் 21 பேர் ஈரான் நாட்டிற்கு மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்றனர். கடந்த 7 மாதமாக சம்பளம் இல்லாமல் இவர்கள் அவதிப்பட்டனர்.

    உணவு, தங்குமிடம் இல்லாமல் நடுரோட்டில் அலைந்து திரிந்தனர். தங்களுக்கு வேலை வேண்டாம், இந்தியாவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்று மீனவர்கள் கேட்ட போது இந்தியா திரும்ப வேண்டுமானால் அதற்கு ரூ.50 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினர்.

    அரசுகளுக்கு கோரிக்கை

    அரசுகளுக்கு கோரிக்கை

    இந்த தகவலை அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    டிக்கெட் எடுத்து கொடுத்து

    டிக்கெட் எடுத்து கொடுத்து

    இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈரான் நாட்டு தூதரக உதவியுடன் 21 மீனவர்களையும் பத்திரமாக மீட்டது. மேலும் இந்திய தூதரகமே மீனவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து ஈரானில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு அனுப்பி வைத்தது.

    சென்னை வருகை

    சென்னை வருகை

    தமிழக மீனவர்கள் 21 பேரும் அதிகாலை சென்னை வந்து சேர்ந்தனர். விமான நிலையத்தில் அதிகாரிகள், உறவினர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

    உறவினர்கள் உற்சாகம்

    உறவினர்கள் உற்சாகம்

    தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பெரும் அவஸ்தைக்கு பின் மீனவர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதையடுத்து உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    English summary
    Tamilnadu fisherman who were suffered in Iran for last 7 months returns to Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X