For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2019-இல் இருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை... தமிழக அரசு அறிவிப்பு

2019-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    2019-இல் இருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை- வீடியோ

    சென்னை: 2019-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படுகிறது. இதை உண்ணுவதால் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும். மேலும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் சூற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

    Tamilnadu Government announces Plastic free TN

    குப்பைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விலங்குகள் உண்ணும் போது தொண்டைகளில் சிக்கி சில உயிரினங்களை இழக்கிறோம். எனவே பிளாஸ்டிக் இல்லா நாட்டை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களும் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றன.

    இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரின்போது சுற்றுச்சூழல் குறித்து முதல்வர் பேசினார். அப்போது சட்டசபை விதி 110-இன் கீழ் அவர் அறிவிக்கையில் பிளாஸ்டிக் பொருட்களால் தண்ணீர் தேங்கி டெங்கு போன்ற நோய் ஏற்படுகிறது.

    மழைநீர் கால்வாய்களை அடைத்து வெள்ளம் ஏற்பட பிளாஸ்டிக் காரணமாகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் ஆடு, மாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    வரும் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம். பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.

    பிளாஸ்டிக் இல்லாத மாநிலத்தை வருங்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம். பால், தயிர், மருந்து பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Government announces Plastic free Tamilnadu. CM Edappadi Palanisamy announces this under 110 rule.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X