For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

TN Budget: கீழடியில் தொல்பொருள் ஆய்வுக்கு ரூ 12 கோடி ஒதுக்கீடு.. தமிழக அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    5 வருஷமா சொல்லிட்டிருந்தேன்.. தமிழக அரசு செவி சாய்த்து விட்டது.. சு.வெங்கடேசன் மகிழ்ச்சி - வீடியோ

    சென்னை: கீழடியில் தொல்பொருள் ஆய்வுக்கு ரூ 12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

    2020-2021-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை வணங்கி ஓபிஎஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    Tamilnadu government announces Rs 12 crore for Kiladi

    அப்போது அவர் கூறுகையில் 2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும். தமிழக அரசின் வருவாய் ரூ.2,19,375 கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ 22,226 கோடியாகும்.

    உணவு மானியத்திற்கு ரூ 6,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் 12.21 கோடி ரூபாயில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு நாள் விழாவின் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

    Tamilnadu government announces Rs 12 crore for Kiladi

    கீழடியில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் 50 சென்ட் நிலப்பரப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தொன்மையான கட்டடங்களின் தரைத்தளங்கள், மதில் சுவர்கள், வடிகால்கள், சுடுமண் குழாய்கள், சதுரங்கக் காய்கள், மணிகள், வணிகர்களின் எடைக் கற்கள், நெசவுத் தொழிலுக்கான தக்கைகள் உள்ளிட்டவை கிடைத்தன.

    இது போல் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொது பட்ஜெட்டில் தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

    English summary
    Tamilnadu Budget 2020-2021: Deputy CM and Finance Minister O.Paneerselvam announces Rs. 12 crore allocated for upcoming Kiladi museum.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X