For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சகாயம் அறிக்கையை ஏற்க முடியாது, சிபிஐ விசாரணை தேவையில்லை.. தமிழக அரசு

கிரானைட் முறைகேடு விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : கிரானைட் முறைகேடு விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த அறிக்கையை முழுமையாக ஏற்க முடியாது, சிபிஐ விசாரணையும் தேவையில்லை என்று தமிழக அரசு ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிரானைட் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை உயர் நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழுவினர் கடந்த 2015ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், கிரானைட் முறைகேடு மூலம் தமிழக அரசுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி இருந்தது.

மேலும், இந்த முறைகேடுகள் தொடர்பாக மேல் விசாரணையாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது பண மோசடி சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

 அரசு பரிசீலிக்கிறது

அரசு பரிசீலிக்கிறது

இந்நிலையில் இந்த வழக்கில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஹைகோர்ட்டில் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அரசுக்கு 212 பரிந்துரைகளை கொடுத்துள்ளார். அதில் 131 பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு அவற்றின்மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் சகாயம் பரிந்துரைத்த 67 பரிந்துரைகளில் உரிய முகாந்திரம் இல்லாததால் அவற்றை தமிழக அரசு நிராகரித்துள்ளது.

 முக்கிய நபர்கள் கைது

முக்கிய நபர்கள் கைது

சகாயம் அறிக்கையில், மதுரை மாவட்டக் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தியுள்ளதாகவும், முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை பாராட்டிற்குரியதே, அதே நேரத்தில் அப்போதைய போலீஸ் சூப்பிரண்ட் பாலகிருஷ்ணன் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் பன்னீர் முகமது ஆகியோரைக் கைது செய்துள்ளார் என்று சிறப்பு அதிகாரியான அறிக்கை அளித்துள்ளார்.

 கிரானைட் பிளாக்குகள் பறிமுதல்

கிரானைட் பிளாக்குகள் பறிமுதல்

சிறப்பு அதிகாரியின் அறிக்கையில், பட்டா நிலத்தில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 35,462 கிரானைட் பிளாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்டிருந்த 27,020 கிரானைட் பிளாக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கிரானைட் விலை நிர்ணயம்

கிரானைட் விலை நிர்ணயம்

சகாயம் அறிக்கையில் ஒவ்வொரு கியூபிக் மீட்டர் கிரானைட்டும் 1200 அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் கைப்பற்றப்பட்ட கிரானைட் கற்கள் ஒரு கியூபிக் மீட்டர் 500 முதல் 700 அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாகும். கிரானைட் விஷயத்தில் ஒரே சீரான விலையை நிர்ணயிக்க முடியாது.

 சுங்கத்துறை மதிப்பீடு

சுங்கத்துறை மதிப்பீடு

கிரானைட் கற்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக சகாயம் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், கிரானைட் கற்களின் விலை மதிப்பில் சுங்கத்துறையினரின் மதிப்பீடு குறித்து எந்த பிரச்னையும் இல்லை என்று சிறப்பு அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 மேல் நடவடிக்கை தேவையில்லை

மேல் நடவடிக்கை தேவையில்லை

மண்ணியல் மற்றும் கனிமங்கள் துறைகளின் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே சகாயம் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அறிக்கையில் துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படவில்லை. எனவே, அதிகாரிகள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில் இந்த கிரானைட் முறைகேடு விஷயத்தில் மேல் விசாரணையான சிபிஐ விசாரணை நடத்தத் தேவையில்லை என்று தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu chief sceretary Girija vaidyanathan files reply petition at Chennai HC in Madras Highcourt that there is no CBI enquiry needed at Madurai illegal granite mining.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X