For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதுகாப்பான மகப்பேறு திட்டம்.. தமிழகத்துக்கு மத்திய அரசு விருது

பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே, பிரசவ மரணங்கள் மிகவும் குறைவாக உள்ளது. தமிழகம் மருத்துவ துறையில் மிகவும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருப்பதால், தமிழகத்தில் பிரசவ மரணங்கள் கிட்டத்தட்ட ஒன்று இரண்டு என்று குறைக்கப்பட்டுவிட்டது என்று கூட கூறலாம்.

Tamilnadu Government gets award for PMs Safe Maternity Program

இந்தியா முழுவதும் பாதுகாப்பான பிரசவத்திற்காக பிரதமர் மோடி பாதுகாப்பான் மகப்பேறு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. விருதை டெல்லியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றார்.

2014-16இல் பிரசவ காலங்களில் தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் மிகவும் குறைவு. மற்ற மாநிலங்களை விட பிரசவ இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக விருது அளிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Government gets an award for PM's Safe Maternity Program for better performance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X