For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை.. ஸ்டாலின் கண்டனம்

சென்னையில் நடக்கும் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்களின் போராட்டம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்த ஆசிரியர்கள் போராட்டம்-வீடியோ

    சென்னை: சென்னையில் நடக்கும் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்களின் போராட்டம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

    ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். சென்னை சேப்பாக்கம், வாலஜா சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கோட்டை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    Tamilnadu government not focusing in Jacto Geo issue says, Stalin

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்கள். மோசமாக போலீசால் தாக்கப்பட்டு இவர்களை கைது செய்து அருகருகே உள்ள மண்டபங்களில் அடைத்து வைத்தார்கள். இதில் மோசமாக தாக்கப்பட்ட தியாகராஜன் என்று ஆசிரியர் மரணம் அடைந்தார்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களுடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தி இருக்கிறார். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அவர்களிடம் அவர் உறுதி அளித்தார். இந்த சந்திப்பிற்கு பின் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    அதில் ''தமிழகத்தில் அரசு இருப்பதாக நினைக்கவில்லை. ஊழியர்களின் போராட்டம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை.ஆணவத்தின் உச்சாணி கொம்பில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை.'' என்றுள்ளார்.

    மேலும் ''போராட்டம் நடத்திய ஜாக்டோ- ஜியோவினரை வலுக்கட்டாயமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது.போராட்டம் அறிவித்த உடனே அவர்களிடம் அரசு பேசி சுமூகத்தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.தமிழகத்தில் அரசாங்கம் ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை'' என்றார்.

    நேற்றே போராட்டம் நடத்தாத வந்த அரசு ஊழியர்களை அரசு கைது செய்து இருந்தது. சுமார் 1500 அரசு ஊழியர்களை போலீஸ் நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Jacto Geo members Protest to siege Secretariat Police blocked the Roads and the Traffic heavily affected and Public suffers alot. Tamilnadu government not focusing in Jacto Geo issue says, Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X