For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்!

By Rajeswari
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சுதந்திர தினத்தையொட்டி அரசு பள்ளிகளில் பிரி கேஜி (Pre-KG), எல்கேஜி (LKG), யூகேஜி (UKG) வகுப்புகளை துவக்கிவைத்தார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில் செங்கோட்டையன் கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற பின் கல்வித்துறை புதுப் பொலிவோடு செயல்படுவதாக அரசியல் தாண்டி பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Tamilnadu government school opens primary education

இதை மெய்ப்பிக்கும் வகையில் மற்றுமொரு சாதனையை சத்தமில்லாமல் செய்துள்ளது தமிழக கல்வித் துறை!

தமிழகத்தில் மட்டும் அல்ல பிற எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு அற்புதமான செயலை நிகழ்த்தியுள்ளார் கல்வி அமைச்சர் செங்கோட்டையன். ஆம் தனியார் பள்ளிகளுக்கே சொந்தமான பிரி கேஜி (Pre-KG), எல்கேஜி (LKG), யூகேஜி (UKG) வகுப்புகளை, அரசு பள்ளிகளிலும் கொண்டுவந்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி அரசு பள்ளிகளில் பிரி கேஜி (Pre-KG), எல்கேஜி (LKG), யூகேஜி (UKG) வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்த பின் கூறும்போது சோதனை முயற்சியாக 32 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டம் பின்னர் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

English summary
In Tamilnadu Education Minister chenkottayan Independence Day started pre-KG, LKG and UKG classes in government schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X