For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் திறக்காதீர்கள்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை உயர்நீதிமன்றம், 'டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் திறக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வியாபார நோக்கத்துடன் செயல்படக் கூடாது' எனவும் கூறி உத்தரவிட்டுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை அதிகப்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு கேடுதான் ஏற்படும் என உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அப்பீல் மனுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதனையடுத்து, 3321 மதுக்கடைகள் ஒரே இரவில் தமிழக அரசு அகற்றியது. இதன் மூலம் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டது.

Tamilnadu government should not work in business motive said Chennai high court

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் அகற்றிய அகடைகளை ஊருக்குள்கொண்டு வந்தது. அதற்கு தமிழகம் முழுவதும் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் உள்ளிட்ட 10 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தடை கோரி வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும் கிராம சபையில் மதுக்கடைகளுக்கு எதிராக தீர்மனம் நிரைவேற்றப்பட்டால் மதுக்கடைகளை திறக்கக் கூடாது, அமைதியான வழியில் போராடுகிறவர்களை கைது செய்யக் கூடாது, அவர்கள் மீது தடியடி நடத்தக் கூடாது 'என உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யகோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யபப்ட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் பொதுமகக்ளுக்கு கேடு உண்டாக்கும். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு வியாபர நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று கூறினர்.

மேலும், ஊருக்குள் கடை திறப்பதை எதிர்த்து மக்கள் போராடும் செய்திகளை தினமும் செய்திகளில் பார்க்கிறோம். மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் ஜனநாயகம். எனவே பொதுமக்களின் எதிர்ப்புக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

English summary
Tamilnadu government should not work in business motive in TASMAC case told Chennai high court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X