For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"லோடுமேன்" ஆக மாறி அசத்திய வயநாடு கலெக்டர் ராஜமாணிக்கம்.. நெகிழ வைக்கும் வெள்ள நிவாரண பணிகள்

கேரள மக்களுக்காக உதவிய ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Google Oneindia Tamil News

வயநாடு: படித்தால் மட்டும் போதுமா? பொறுப்பை வகித்தால் மட்டும் போதுமா? என் மக்கள், என் சகோதரர்கள் என்று வந்துவிட்டால் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு களத்தில் இறங்கி உதவியும் செய்வோம் என்று செயலில் காட்டியுள்ளார் வயநாடு கலெக்டர் ராஜமாணிக்கம்.

கேரளாவில் மழை பொத்துக் கொண்டு ஊத்தி வருகிறது.. இயற்கையின் கோபம் இன்னும் தணிந்தபாடில்லை. மக்களின் உயிரிழப்போ பெருகி கொண்டே வருகிறது. மீட்பு நடவடிக்கையோ சளைக்காமல் நடக்கிறது. நிவாரண உதவியோ குவிந்து கொண்டுள்ளது. நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பார்வையும், கவலையும், பரிதாபமும் கேரள மண்ணை நோக்கியே பாய்கிறது.

 இரவு பகல் உதவி

இரவு பகல் உதவி

கேரளாவின் ஒரு பகுதியான வயநாட்டிலும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த மீட்பு பணியினை மக்களோடு மக்களாக செய்து வருவது கேரள மாநில உணவு பாதுகாப்புத்துறையின் ஆணையரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ராஜமாணிக்கம்தான். இவர், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இரவு பகல் பாராமல் களத்தில் இறங்கிவிடுகிறார்.

 களத்தில் இறங்கிய அதிகாரி

களத்தில் இறங்கிய அதிகாரி

நள்ளிரவு ஆனாலும் வெள்ளச்சேதங்களை பார்வையிடவும் இவர் தயங்குவதில்லை. அப்படித்தான் நள்ளிரவு அப்போது வயநாடு கலெக்டர் அலுவலகத்துக்கு நிறைய நிவாரணப்பொருட்களுடன் ஒரு டெம்போ வந்து நின்றது. ஆனால் வாகனங்களில் உள்ள பொருட்களை இறக்கி வைக்க அந்த ராத்திரி நேரத்தில் ஆள்கள் இல்லை. ஏற்கனவே மீட்பு பணியில் ஈடுபட்டு களைத்திருந்த ராஜமாணிக்கம் இதனை கவனித்தார். பின்னர் தானே களத்தில் இறங்கிவிட்டார்.

 லோடு மேன்!!!

லோடு மேன்!!!

நிவாரணப் பொருள்களை தலையிலும் தோளிலும் தூக்கிவைத்தும், இறக்கி வைத்தும் லோடு மேன் மாதிரி கடுமையாக மீட்பு பணியில் இறங்கி உள்ளார். ஒரு ஐஏஸ் அதிகாரி இப்படி இறங்கி வேலை பார்க்கிறாரே என்று இதனை உடன் இருந்த பார்த்த அங்கிருந்த சப்-கலெக்டர் உமேஷ்-ம் மூட்டைகளை தூக்க ஆரம்பித்துவிட்டார்.

 செல்வி எடுத்த மக்கள்

செல்வி எடுத்த மக்கள்

மழை கொட்டோ கொட்டு என கொட்டினாலும் ஐஏஎஸ் அதிகாரி உதவி செய்வது நின்றபாடில்லை. இதனை பொதுமக்கள் வியப்புடனும், சந்தோஷத்துடனும், பெருமையுடனும் பார்த்து நின்றனர். சிலர் இதனை வீடியோ எடுத்தனர். சிலர் ராஜமாணிக்கம் மீது அதிகபட்ச மரியாதை காரணமாக ஓடிவந்து செல்பியே எடுத்து கொண்டனர்.

 ஈரம் கசியும் மனசு

ஈரம் கசியும் மனசு

சில இளைஞர்கள் இனி எங்கள் ரோல் மாடல் ராஜமாணிக்கம்தான் என்று மார்தட்டி கொண்டனர். மதுரையை சேர்ந்த ராஜமாணிக்கம், ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்து அரசு பள்ளியில் படித்து உயர்ந்தவர். ஐஏஎஸ் படித்து உயர் பதவியிலே இருந்தாலும் ஒரு மனிதனுக்கு "ஈரம் கசியும் மனசுதான்" முக்கியம் என்பதை நிரூபித்து காட்டியுள்ள ராஜமாணிக்கம்... ரியலி எ க்ரேட் மேன்!!

English summary
TamilNadu IAS Officer Rajamanikkam Carrying Food for Kerala People
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X