For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: கவிதா கைது: ஆதாரங்களை சமர்ப்பிக்க பொன். மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் உத்தரவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை கைது செய்தது ஏன்? என்று சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும்,
ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் ஹைகோர்ட் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். கவிதாவுக்கு சம்மன் அனுப்பாமல் கைது செய்தது ஏன் என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியதற்கு, தக்க ஆதாரங்கள் இருப்பதால்தான் அவரை கைது செய்ததாக
பொன்மாணிக்கவேல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தகுந்த ஆதாரம் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொன்.மாணிக்கவேலுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newest First Oldest First
7:25 PM, 3 Aug

காவேரி மருத்துவமனைக்கு வந்தார் கமல்ஹாசன்

கருணாநிதி நலம் விசாரிக்க வருகை

7:21 PM, 3 Aug

சிலைக் கடத்தல் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்? ஹைகோர்ட் கேள்வி

ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு உத்தரவிட்டது ஹைகோர்ட்

அப்படி இருக்கும்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது ஏன்? - நீதிபதி மகாதேவன் கேள்வி

6:30 PM, 3 Aug

செயல்படாத விசாரணை ஆணையங்களைக் கலைக்க வேண்டும் - ஹைகோர்ட் உத்தரவு

பங்களாக்களை நீதிபதிகள் காலி செய்யவும் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

அரசு அலுவலகங்களில் மட்டும்தான் ஆணையங்கள் செயல்பட வேண்டும் - ஹைகோர்ட்

பங்களாக்கலை நீதிபதிகள் காலி செய்யவும் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

6:10 PM, 3 Aug

புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் முறைகேடு என்று கூறி விசாரிக்க நியமிக்கப்பட்டது ரகுபதி கமிஷன்
6:09 PM, 3 Aug

ரகுபதி கமிஷனை கலைத்து சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

இரண்டே வாரத்தில் அலுவலகத்தை காலி செய்யவும் உத்தரவு

ஆவணங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்கவும் நீதிபதிகள் உத்தரவு

ரகுபதி கமிஷனுக்காக தமிழக அரசு வீண் செலவு செய்வதாக ஹைகோர்ட் கூறியிருந்தது

5:54 PM, 3 Aug

கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க தேவகவுடா வருகை

காவிரி மருத்துவமனைக்கு வந்துள்ளார் முன்னாள் பிரதமர் தேவகவுடா

5:49 PM, 3 Aug

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் சபாநாயகர் தரப்பு வாதம்

விதிமுறைகளின்படியே 18 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஹைகோர்ட் 3வது நீதிபதி முன்னிலையில் சபாநாயகர் தரப்பு வாதம்

5:19 PM, 3 Aug

உள்நோக்கத்துடன் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றம்: கமல்ஹாசன்

ஊழல் இல்லாத கட்சிகளுடன்தான் லோக்சபா தேர்தலில் கூட்டணி: கமல்ஹாசன்

5:13 PM, 3 Aug

சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி

தமிழக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை-கமல்ஹாசன்

இப்படியெல்லாம் நடக்க கூடும் என எனக்கு எதிராக வழக்கு போட்டது வியப்பாக உள்ளது-கமல்ஹாசன்

5:03 PM, 3 Aug

சென்னையில் 4 உதவி கமிஷனர்கள் இடமாற்றம்
4:59 PM, 3 Aug

தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் மழை பெய்யும்

தமிழகம், புதுச்சேரியில் இயல்பையொட்டி பருவமழை பெய்துள்ளது

கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 3 வரை தமிழகம், புதுச்சேரியில் 112 மி.மீ மழை பதிவு

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்

4:55 PM, 3 Aug

கோவை புனிதாவுக்கு 2 நாள் போலீஸ் காவல்

மாணவிகளை தவறான பாதையில் ஈடுடுத்த முயன்றதாக புனிதா மீது வழக்கு

2 நாள் போலீஸ் காவலில் அனுமதித்து கோவை கோர்ட் உத்தரவு

4:41 PM, 3 Aug

சென்னையில் 4 உதவி கமிஷனர்கள் இடமாற்றம்
4:13 PM, 3 Aug

கூட்டுறவுசங்க தேர்தல் முறைகேடு புகார்களை விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்

ராஜேஸ்வரன், ராமநாதன், வெங்கட்ராமன், ஜெயசூர்யா ஆகியோரை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்

4:09 PM, 3 Aug

சென்னையில் சிஎஸ்ஐ இம்மானுவேல் சர்ச்சின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது

அண்ணா நகர் சிஎஸ்ஐ இம்மானுவேல் சர்ச்சின் குறிப்பிட்ட பகுதி இடிக்கப்பட்டது

பொதுப்பணித்துறை அதிகாரிகள் சர்ச்சின் ஒரு பகுதியை இடித்தனர்

சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு நடக்கும் போதே இடிக்கப்பட்டது

பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீஸ் குவிப்பு

2:41 PM, 3 Aug

சசிகலா குடும்பத்தாரால் எனது உயிருக்கு ஆபத்து- ஜெ. தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

சசிகலா, தினகரன் ஆட்களிடமிருந்து பாதுகாப்பு வழங்குங்கள்- கமிஷனரிடம் ஜெ. தீபா மனு

2:39 PM, 3 Aug

சசிகலா குடும்பத்தாரால் எனது உயிருக்கு ஆபத்து- ஜெ. தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

சசிகலா, தினகரன் ஆட்களிடமிருந்து பாதுகாப்பு வழங்குங்கள்- கமிஷனரிடம் ஜெ. தீபா மனு

1:59 PM, 3 Aug

தேர்வுத்தாள் மதிப்பீடு முறைகேடில் மிகப்பெரிய நெட்வொர்க்: சூரப்பா திடுக்
1:58 PM, 3 Aug

அரசிடமிருந்து சலுகை கேட்டு கோரிக்கை வந்துள்ளது - சூரப்பா

அதை நான் அனுமதிக்க மாட்டேன்- சூரப்பா

அண்ணா பல்கலைக்கழக சார்பு கல்லூரியில்தான் ஊழல் நடந்துள்ளது - சூரப்பா

1:58 PM, 3 Aug

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஊழல் நடைபெறவில்லை - சூரப்பா
1:58 PM, 3 Aug

ஊழல் தொகை குறித்த சரியான தகவல் இல்லை - சூரப்பா

தவறு நடந்து விட்டது, இனி தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் - சூரப்பா

1:58 PM, 3 Aug

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழலை அனுமதிக்க மாட்டேன் - துணை வேந்தர் சூரப்பா

ஊழல் நாடு முழுவதும் உள்ள பிரச்சினைதான் - சூரப்பா

விடைத்தாள் மறு மதிப்பீடு ஊழல் தொடர்பாக விசாரணை நடைபெறும்

1:28 PM, 3 Aug

திண்டிவனம் அரசு என்ஜீனியரிங் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

பேராசிரியர் சிவக்குமார் சஸ்பெண்ட்

விடைத்தாள் மறு மதிப்பீடு மோசடியில் அதிரடி நடவடிக்கை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பேட்டி

12:34 PM, 3 Aug

சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருப்பது, வழக்கை திசை திருப்பும் செயல் - தமிழிசை

பொன்.மாணிக்கவேலுக்கு போதிய அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்-தமிழிசை

12:16 PM, 3 Aug

அண்ணா பல்கலை. மறுமதிப்பீடு முறைகேடு

முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட்

11:51 AM, 3 Aug

விஸ்வரூபம் 2க்கு தடை கோரி வழக்கு.. கமல்ஹாசனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
11:51 AM, 3 Aug

விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைகோரி தொடர்பாக கமல்ஹாசனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

மர்மயோகி படத்திற்கு கமல் பெற்ற தொகையை திருப்பித்தர கோரி வழக்கு

வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடி தர வழக்கு

11:33 AM, 3 Aug

இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை கைது செய்தது ஏன்?

ஐஜி பொன்மாணிக்கவேலிடம் ஹைகோர்ட் நீதிபதிகள் கேள்வி

மாஜிஸ்திரேட்டிடம் ஆதாரத்தை காட்டிவிட்டு கைது செய்ததாக ஐஜி பொன்மாணிக்கவேல் பதில்

தகுந்த ஆதாரத்தை காட்ட நீதிபதிகள் ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவு

தகுந்த ஆதாரம் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை - ஐஜிக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

11:23 AM, 3 Aug

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ செய்தியாளர்கள் சந்திப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 100 சதவிகிதம் நம்பகமானது

வருகிற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபாட் அமல்படுத்தப்படும்

11:22 AM, 3 Aug

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதி மகாதேவன் அமர்வு ஒப்புதல்

READ MORE

English summary
Tamilnadu Idol theft case issue become strong after opposition parties oppose government decision to handover the case to CBI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X