For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதால் வளர்ச்சியடையவில்லை.. மதுரையில் அமித்ஷா பேச்சு

Google Oneindia Tamil News

மதுரை : ஊழல் மலிந்திருப்பதால் தமிழகம் வளர்ச்சியடைவில்லை என பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையும், சுதேசி இயக்கமும் இணைந்து நடத்திய பிரதிநிதிகள் மாநாடு ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது...

amid shah

நான் இரண்டாவது முறையாக மதுரைக்கு வந்துள்ளேன். நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. தமிழகத்தில் ஊழல் ஒழிந்திருந்தால் வளர்ச்சியடைந்த முதல் மாநிலமாக தமிழகம் இருந்திருக்கும். வளர்ச்சியும் ஊழலும் ஒன்றாக இருக்க முடியாது. தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாற வேண்டும்.

தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில் இருந்தாலும், ஊழல் மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் இருப்பதால் வளர்ச்சியை எட்ட முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

தமிழக முன்னோர்களின் செல்வத்தின் அடையாளமாக மீனாட்சி அம்மன்கோவி்ல் உள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செüந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu is not improved by corruption- Amid Shah said in Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X