For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் கன மழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Weather Report | தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு-வீடியோ

    சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு: மத்திய மகாராஷ்டிரா, கடலோர ஆந்திரா, ஏனம், உள்பகுதி கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல் ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

    Tamilnadu, Karnataka to receive heavy rain today

    காரைக்கால், கேரளா, மாஹே போன்ற இடங்கள் நாள் முழுவதும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், ஒடிசா, மத்திய மகாராஷ்டிரா, கொங்கன், கோவா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். டெல்லியில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் மற்றும் 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இப்பகுதியில் ஈரப்பதம் 78 சதவீதமாக இருக்கும்.

    English summary
    The India Meteorological Department (IMD) said that Interior Karnataka, Tamil Nadu, Puducherry and Karaikal are likely to receive heavy rainfall today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X