For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட.. அமமுகவா இப்படி!.. சத்தமின்றி வேலை பார்த்த டிடிவி தினகரன்.. எதிர்பார்த்ததை விட செம ஆதரவு!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுக தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன ?

    சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுக தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெற்றுள்ளது. வரிசையாக தோல்விகளை தழுவி வந்த அமமுகவிற்கு இது கண்டிப்பாக புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த வாரம் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 9 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மொத்தமாக முடிந்துள்ளது.

    இதில் திமுக கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக பல இடங்களில் இரண்டாம் இடம் வகித்து வருகிறது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அமமுக கட்சியும் நன்றாக பங்களித்துள்ளது.

    அந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோஅந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ

    தேர்தல் எப்படி

    தேர்தல் எப்படி

    இந்த தேர்தலில் அமமுக அதிக அளவில் வாக்குகளை பெற்று வருகிறது. 200 மாவட்ட கவுன்சிலர் தொகுதிகளில் அமமுக மூன்றாம் இடம் வகிக்கிறது. திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பல
    தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. முக்கியமாக அதிமுகவின் வாக்குகளை அமமுக அதிக அளவில் பிரித்துள்ளது. தென் மாவட்டங்களில்தான் அமமுக மிகவும் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

    தூத்துக்குடி எப்படி

    தூத்துக்குடி எப்படி

    இது போக இன்னொரு பக்கம் தூத்துக்குடியில் அமமுக தவிர்க்க முடியாத சக்தியாக வளர தொடங்கி உள்ளது. தூத்துக்குடியில் இரண்டு, நீலகிரியில் ஒன்று என்று மூன்று மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் அமமுக முன்னிலை வகித்து வருகிறது. மிகவும் குறைந்த வாக்குகளே இங்கு வித்தியாசம் உள்ளது. உதகமண்டலம் , கயத்தாறு, மன்னார்குடி, நெல்லையில் பல பகுதியில் அமமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

    அமமுக பின்னடைவு

    அமமுக பின்னடைவு

    அதனால் இங்கு எப்போது வேண்டுமானாலும் அமமுக பின்னடைவை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. அமமுக நினைத்தை இந்த தேர்தலில் சிறப்பாகவே களப்பணியாற்றி, வாக்குகளை அள்ளியுள்ளது. மிக அமமுகவிற்கு பொதுச்சின்னம் இல்லை. பொதுச்சின்னம் இல்லாமல் அமமுக இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளது.

    தலைகள் இல்லை

    தலைகள் இல்லை

    அமமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் எல்லோரும் சென்றுவிட்டனர். அமமுகவின் முகம் என்று கருதப்பட்ட செந்தில் பாலாஜி, புகழேந்தி, தங்க தமிழ்ச்செல்வன் என்று எல்லோரும் கட்சியை விட்டு வெளியே சென்றுவிட்டார்கள். டிடிவி தினகரன் மட்டும்தான் தனி நபராக அனைத்தையும் கவனித்து வருகிறார்.

    என்ன இடைஞ்சல்

    என்ன இடைஞ்சல்

    இவ்வளவு இடைஞ்சல் இருந்தும் கூட அமமுக கட்சி பல தொகுதிகளில் வாக்குகளை குவித்துள்ளது. தென் மாவட்டங்களில் சில கவுன்சிலர் தொகுதிகளில் அமமுக, அதிமுகவை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் செயல்பாடு அமமுக தொண்டர்களை உற்சாகப்படுத்துமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Tamilnadu Local body elections: AMMK came back to the floor, Gave a good performance in many places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X