For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாவட்ட கவுன்சிலர்களை தட்டி தூக்கிய திமுக.. ஒன்றிய கவுன்சிலர்களை அள்ளிய அதிமுக.. தேர்தலில் டிவிஸ்ட்

உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், வல்லுநர்கள் யாரும் கணிக்காத அளவில் முடிவுகள் வெளியாகி வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், வல்லுநர்கள் யாரும் கணிக்காத அளவில் முடிவுகள் வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு முழுமையான முடிவுகள் தெரிய வரும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது.மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.

எம்எல்ஏ, எம்பி தேர்தலில் விட்டதை பிடிக்கும் அமமுக .. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 3 இடங்களில் வெற்றி எம்எல்ஏ, எம்பி தேர்தலில் விட்டதை பிடிக்கும் அமமுக .. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 3 இடங்களில் வெற்றி

அதிமுக வாய்ப்பு

அதிமுக வாய்ப்பு

இந்த தேர்தலில் அதிமுகதான் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. அதிமுக இந்த தேர்தலுக்காக முன்பில் இருந்தே தீவிரமாக தயாரானது. தீவிர பிரச்சாரம் செய்தது. ஆனால் திமுகவோ தேர்தலுக்கு எதிராக வழக்குகளை தொடுத்து, கடைசி வரை தேர்தலில் கவனம் செலுத்தவில்லை.

திமுக நிலை

திமுக நிலை

இதனால் இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும். அதிமுக பெரிய அளவில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டது. தேர்தலுக்கு முந்தைய அரசியல் வல்லுனர்களின் கணிப்புகளும் அதைத்தான் உறுதிப்படுத்தியது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளது.

மாவட்ட கவுன்சிலர்

மாவட்ட கவுன்சிலர்

அதன்படி மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் பின்வரும் நிலவரம் நிலவி வருகிறது. இதில் திமுக முன்னிலை வகிக்கிறது.


மொத்தம் - 515

திமுக - 80

அதிமுக - 61

மற்றவை - 1

ஒன்றியம்

ஒன்றியம்

ஆனால் இன்னொரு பக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

மொத்தம் - 5090

அதிமுக - 193

திமுக - 165

மற்றவை - 14

பெரிய போட்டி

பெரிய போட்டி

இதில் திமுக, அதிமுக இடையே மிக கடுமையாக போட்டி நிலவுகிறது. இரண்டு தேர்தலிலும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. அதிமுகவும் தன்னுடைய வாக்கு வங்கியை இழக்கவில்லை. திமுகவும் மக்கள் இடையே நம்பிக்கையை இழக்கவில்லை. திமுக, அதிமுக ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என்பது தேர்தல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

திமுக கொஞ்சம்

திமுக கொஞ்சம்

பொதுவாக நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு அருகே மாவட்ட கவுன்சிலர் தொகுதிகளில் திமுகதான் அதிகமாக முன்னிலை வகிக்கிறது. அங்கு மக்கள் திமுகவிற்கே அதிக ஆதரவு அளித்துள்ளனர். இதனால் நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தால் அதில் திமுக முன்னிலை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

English summary
Tamilnadu Local body elections:DMK and AIADMK both parties performed very well with neck to neck fight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X