For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. தமிழகம் முழுக்க மக்கள் உற்சாகம்

தமிழகம் முழுக்க இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்...தமிழகம் முழுக்க மக்கள் உற்சாகம்- வீடியோ

    சென்னை: தமிழகம் முழுக்க இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் உற்சாகமாக விழாவை கொண்டாடி வருகிறார்கள்.

    காவிரியில் ஆடி மாதத்தில் விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர் தேவையை தீர்க்கவும் தண்ணீர் வருவது வழக்கம். இதை காவேரி கரையோர மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

    Tamilnadu People celebrating Aadi Perukku today

    சோழர் காலத்தில் இருந்தே ஆடிப்பெருக்கு கொண்டாடுவது மக்களால் பின்பற்றப்படுகிறது. இயற்கையை வழிபடும் இந்த நிகழ்வு மக்களோடு வாழ்க்கை முறையோடு ஒன்றாக பிணைந்து இருக்கிறது.

    இந்த நிலையில் இன்று தமிழகம் முழுக்க இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.டெல்டா மாவட்டங்களில் விழாவை மக்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் காவிரி கரையோர மாவட்டங்களில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    காவிரியில் நீர் நிரம்பி செல்வதால் மக்கள் உற்சாகமாக விழாவை கொண்டாடுகிறார்கள். ஆடிப்பெருக்கை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாறு படித்துறையில் மக்கள் கூடி உள்ளனர். புதுமண தம்பதியர் தங்களது கல்யாண மாலையை காவிரியாற்றில் விட்டு புனித நீராடினர்.

    மேலும் குற்றாலம், சேலம், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. ஆண்கள் பெண்கள் என்று பலர் விழாவை கொண்டாடி வருகிறார்கள்.

    ஒகேனக்கல்லில் இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது ஆடிப்பெருக்கு விழா.பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மூன்று நாட்கள் விழா நடைபெறுகிறது. சென்ற வருடம் காவிரியில் நீர் இல்லாமல் கலை இழந்த விழா இந்த வருடம் சிறப்பாக நடைபெற உள்ளது. அருவி நகரமான குற்றாலத்தில் அருவிகளில் குளித்துவிட்டு திருக்குற்றாலநாதரை தரிசனம் செய்யும் விழாவும் இன்று நடக்கும்.

    English summary
    Tamilnadu People celebrating Aadi Perukku today as Cauvery overflows in their districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X