For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை கைது செய்யத் திட்டம்?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எல்எல்ஏக்கள் பலரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எல்எல்ஏக்கள் 18 பேரில் பலரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்ற எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். எம்எல்ஏக்கள் கூண்டோடு தகுதி நீக்கம் செய்யப்படுவது தமிழக சட்டசபை வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை எனக் கூறப்படுகிறது.

சபாநாயகரின் எம்எல்ஏக்கள் தகுதிநீக்க நடவடிக்கை ஜனநாயக படுகொலை என திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பழனியப்பனிடம் விசாரணை

பழனியப்பனிடம் விசாரணை

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்எல்ஏக்களில் பலரை கைது செய்ய தமிழக போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் மர்ம மரண வழக்கில் எம்எல்ஏ பழனியப்பனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Recommended Video

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள்!-வீடியோ
    செந்தில் பாலாஜியை கைதுசெய்ய திட்டம்

    செந்தில் பாலாஜியை கைதுசெய்ய திட்டம்

    இந்த வழக்கில் எம்எல்ஏ பழனியப்பனை விரைவில் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பணமோசடி செய்ததாக வழக்கு

    பணமோசடி செய்ததாக வழக்கு

    மோசடி வழக்கில் செந்தில்பாலாஜியை கைது செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணம் மோடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிபிசிஐடி போலீசார் திட்டம்

    சிபிசிஐடி போலீசார் திட்டம்

    இந்த வழக்கில் செந்தில்பாலாஜியை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் கர்நாடக மாநிலத்துக்கு சென்றுள்ளனர். செந்தில் பாலாஜி கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Police plans to arrest many MLAs among this disqualifies. Police plans to arrest MLA senthil balaji and MLA palaniyappan. 60
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X