For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் நாளில் ரூ. 480 கோடி ‘செல்லாக்காசுகளை’ மாற்றிய மக்கள்... ரிசர்வ் வங்கி தகவல்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளில், செல்லாத ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ரூ. 480 கோடி மதிப்பிலா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றி, புதிதாக ரூ. 480 கோடி மதிப்பிலான பணத்தை மக்கள் பெற்றுச் சென்றுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என செவ்வாயன்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், மக்கள் தங்களிடமுள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நேற்று வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

Tamilnadu: Rs. 480 crores exchanged in first day

இதனால் நேற்று காலை முதலே வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. மக்கள் தங்களிடமிருந்த செல்லாத நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகள் அல்லது ரூ. 100 மற்றும் ரூ. 50 நோட்டுகளாக சில்லறை பெற்றுச் சென்றனர்.

அந்தவகையில், நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்குப் பதிலாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளித்த புதிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.480 கோடி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறுகையில், "தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அனைத்து வங்கிக் கிளைகள் மூலம் ரூ.480 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன" என்றனர்.

இதுமட்டுமின்றி, புதிய பணத்தை மாற்றுவது மட்டுமின்றி கைவசம் உள்ள பணத்தை வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தவும் நேற்று அதிக ஆர்வம் காட்டினர். அப்படியாக நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய்களை வாடிக்கையாளர்கள் வங்கியில் டெபாசிட் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில், புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் அடங்கிய 270 பெட்டிகள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் ரூ.20 கோடி வீதம் மொத்தம் ரூ.5,400 கோடி தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிக் கிளைகளுக்கு அனுப்பும் பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The RBI officials said that Rs 480 crores were exchanged on the first day in Tamilnadu Banks, after Modi's announcement to curb black money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X