For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக ஆட்சியில் தமிழகத்தை 5ஆக பிரித்து 5 பேர் ஆட்சி செய்தனர்.. ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகம் 5 ஆகப் பிரிக்கப்பட்டு 5 பேரால் ஆட்சி செய்யப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக ஆட்சியில் தமிழகம் 5 ஆகப் பிரிக்கப்பட்டு 5 பேரால் ஆட்சி செய்யப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெறப்பட்டது.

இந்த திட்டத்தில் 10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு இருந்தும், தமிழகத்திற்கு திட்டங்களை திமுக கொண்டு வரவில்லை.

5 ஆக பிரிக்கப்பட்டது

5 ஆக பிரிக்கப்பட்டது

திமுக ஆட்சியில் தமிழகத்தை 5 ஆக பிரித்து 5 பேர் ஆட்சி செய்தனர். திமுகவால் தமிழகம் 5 மண்டலங்களாக பிரித்தாளப்பட்டது.

தனிப்பட்ட நலனுக்கானது அல்ல

தனிப்பட்ட நலனுக்கானது அல்ல

பசுமை வழிச்சாலை திட்டம் தனிப்பட்ட நலனுக்கானது அல்ல. பொதுமக்களுக்காகவே சாலை திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டியது அரசின் கடமை.

இரட்டை ஆட்சிதான்

இரட்டை ஆட்சிதான்

இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் 3வது நீதிபதி மாற்றப்பட்டதில் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. தமிழகத்தில் தற்போது நடந்து வருவது இரட்டை ஆட்சிதான் என்றும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளை கொண்ட இரட்டை ஆட்சி நடக்கிறது.

மக்களின் பயன்பாடு

மக்களின் பயன்பாடு

அரசியல் காரணங்களுக்காக 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்க கூடாது. மக்களின் பயன்பாட்டிற்காகவே 8 வழிச்சாலை அமைக்கபப்டுகிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

English summary
Tamilnadu was five region in the DMK period said Minister Jayakumar. Minister Jayakumar further said the salem 8th way project is for peoples welfare only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X