For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை மக்களே இன்னும் 3 முதல் 4 நாட்களுக்கு உஷார்.. வெப்ப நிலை 40 டிகிரியைத் தாண்டுகிறது!

சென்னை மக்களே இன்னும் 3 முதல் 5 நாட்களுக்கு வெப்பம் சற்று தூக்கலாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை கூறுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை மக்களே இன்னும் 3 முதல் 4 நாட்களுக்கு உஷார்-

    சென்னை: சென்னை மக்களே இன்னும் 3 முதல் 5 நாட்களுக்கு வெப்பம் சற்று தூக்கலாக தூள் கிளப்பும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை கூறுகிறது.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட சற்று அனல் அதிகமாகவே இருக்கிறது. காலை 7 மணிக்கெல்லாம் 10 மணிக்கு கொளுத்துவதை போல் வெப்பம் வாட்டி வதைக்கிறது.

    அக்னி நட்சத்திரம் இத்தனைக்கும் முடிந்து விட்டது. தென்மேற்கு பருவமழை தென்தமிழகத்துக்கு மட்டுமே பயனளிக்கும். மற்றவர்களுக்கு சற்று அனல் இருக்கத்தான் செய்யும்.

    மாலையில் குளுகுளு

    மாலையில் குளுகுளு

    ஆனால் மாலை 6 மணிக்கு மேல் குளு குளுவென காற்று வீசும். இன்று சென்னையில் மிக அதிகமான வெப்பம் மிகுந்த நாளாக கருதப்படுகிறது.

    படு சூடாக இருக்கே

    படு சூடாக இருக்கே

    ஏனெனில் இன்று வெப்பநிலை 39 டிகிரி சென்டிகிரேட் ஆகும். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கையில் கூறுகையில், சென்னையில் வெப்பநிலை 39 டிகிரி சென்டிகிரேட்டை தாண்டியதால் இன்று மிக வெப்பமான நாள் ஆகும்.

    அனல் பறக்கிறது

    அனல் பறக்கிறது

    அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே இருக்கும். 40 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பத்தின் அளவு செல்லலாம். ஒரு ஆண்டுக்குப் பிறகு சென்னையில் கடும் அனல் காற்று வீசி வருகிறது.

    இதுதாண்டா வெயில்!

    சென்னை விமான நிலையம் மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் சென்னை நகரை ஒப்பிடும் போது சிறிது வெப்பம் குறைந்திருக்கும். அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு மட்டுமே சென்னையில் உண்மையான கோடையாகும். 3 முதல் 4 நாட்களுக்கு பிறகு, சென்னை நகரின் சில இடங்களில் மழை பெய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார் .

    English summary
    Hottest day of the year in Chennai with temperature crossing 39 C and Chennai City is expected to see hot above normal 3-4 days, it needs to be seen if Chennai City can cross the 40 C for the first time this year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X