For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆலோசனை நடத்த அழைத்து கட்டியணைக்க முயற்சித்த ஐஜி... தமிழக பெண் எஸ்பி பகீர் புகார்!

தமிழக பெண் எஸ்பிக்கு ஒருவருக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கட்டியணைக்க முயற்சித்த ஐஜி...தமிழக பெண் எஸ்பி பகீர் புகார்!- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக டிஜிபி அலுவலகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக அளித்த புகார் தமிழ்நாடு காவல்துறையையே அதிர வைத்துள்ளது.

    Tamilnadu Woman SP sexual harassment complaint against IG

    பெண் எஸ்பி அளித்த புகாரின்படி, ஆறுபடை வீடுகொண்டவரின் பெயர் கொண்ட ஒரு ஐஜி தனக்கு கீழே பணி புரியும் பெண் எஸ்பியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். உயர் அதிகாரி ஆலோசனை நடத்த அழைக்கிறார் என்பதால் ஐஜியின் அலுவலக அறைக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண் எஸ்பி உள்ளே சென்றதும் அந்த ஐஜி எஸ்பியை பாய்ந்து கட்டியணைக்க முயற்சி செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எஸ்பி ஐஜியை தள்ளிவிட்டுவிட்டு அழுதுகொண்டே வெளியே வந்துள்ளார். பின்னர், அவர் ஒரு வாரம் விடுமுறையில் சென்றுள்ளார்.

    பெண் எஸ்பி அளித்த புகாரின்படி, ஒரு ஐஜி தனக்கு கீழே பணி புரியும் பெண் எஸ்பியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். உயர் அதிகாரி ஆலோசனை நடத்த அழைக்கிறார் என்பதால் ஐஜியின் அலுவலக அறைக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண் எஸ்பி உள்ளே சென்றதும் அந்த ஐஜி எஸ்பியை பாய்ந்து கட்டியணைக்க முயற்சி செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எஸ்பி ஐஜியை தள்ளிவிட்டுவிட்டு அழுதுகொண்டே வெளியே வந்துள்ளார். பின்னர், அவர் ஒரு வாரம் விடுமுறையில் சென்றுள்ளார்.

    அதன்படி, ஐஜி மீது பெண் எஸ்பி அளித்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், சு.அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி ஆகியோரைக்கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் இந்த விசாரணைக் குழுவில், ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலக நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோரும் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகார் பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் தொல்லை தடுப்புச் சட்டப்படி விசாரிக்கப்படுகிறது.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையில் அதிலும் ஒரு ஐஜி அதிகார எண்ணத்தில் ஒரு பெண் எஸ்பியை பாலியல் தொல்லை செய்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் எஸ்பிக்கே இந்த நிலை என்றால் கீழ்நிலை காவலர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Woman SP filed a complaint sexual harassment against IG. Following the complaint DGP T.K.Rajendran nominated Vishaka probing committee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X