For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்க வரவேற்போம் வாங்க ஜஸ்டின் ட்ரூடோ #Tamils4JustinTrudeau

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் வைரலாகி வருகிறார். தமிழக மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    கனடா பிரதமரை கட்டிப்பிடித்து வரவேற்ற மோடி- வீடியோ

    சென்னை: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு தமிழக மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. #Tamils4JustinTrudeau என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

    உலகின் வசீகர தலைவரான கனடா பிரதமர் தமிழர்களையும், தமிழக பாரம்பாரியத்தையும் மதிப்பவர். பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவார். இதன் மூலம் தமிழர்களின் மனதையும் கவர்ந்துள்ளார்.

    ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17ஆம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், மனைவி, குழந்தைகள் சேவியர், எல்லா கிரேஸ், ஹட்ரியன் ஆகியோருடன் தாஜ்மகாலுக்கு சென்று சுற்றிப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.

    வரவேற்காதது ஏன்?

    வரவேற்காதது ஏன்?

    சீக்கிய புரட்சி அமைப்புகளுக்கு கனடா ஆதரவு அளித்து வருகிறது. சீக்கியர்களின் காலிஸ்தான் கோரிக்கைக்கும் கனடா ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல் பாஜகவிற்கு நெருக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு கனடா இயக்கங்கள் எதிராக இருக்கிறது. இந்த நிலையில் கனடா பிரதமர் அவமதிப்பு செய்யப்படுவதாக செய்திகள் பரவின. தமிழக மக்கள் கனடா பிரதமருக்கு சமூக வலைத்தளங்களில் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    இந்தியா வந்தது ஏன்?

    கை குலுக்கவோ கட்டிபிடிக்கவோ இந்தியா வரவில்லை. இங்குள்ள கலாச்சரத்தை பன்முக தன்மையை பற்றி அறியவே வந்துள்ளேன் என்று கனடா பிரதமர் கூறியுள்ளார். இதற்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

    தமிழர்களின் சொந்தம்

    எப்ப நீங்க தமிழர் பண்டிகைய கொண்டாடுனீங்களோ அப்பவே தமிழர்களுக்கு சொந்தமாகிட்டிங்க. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அன்புடன் வரவேற்கிறோம்

    தமிழர் நாட்டின் சார்பாக வருக வருக

    தமிழையும் தமிழனையும் உச்சாணிக் கொம்பில் வைத்து, அழகு பார்க்கும் பெருமகன்...
    கனடா பிரதமர் திரு. ட்ரூடோ அவர்களை தமிழர் நாட்டின் சார்பாக வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்...
    வருகிற 25ஆம் தேதி அவர் தமிழகம் வருவதாகத் தகவல்.. உறுதிப்படுத்தவில்லை என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

    வரவேற்போம்

    கொண்டாடுவோம்......தமிழரோடு தமிழராகிய கனடா நாட்டு பிரதமர் திரு.ஜஸ்டின் ட்ரூடோவை என்று பதிவிட்டுள்ளார்.

    தமிழகம் வரவேற்பு

    #தஞ்சை மாநகரம் தங்களை அன்போடு வாரவேற்கிறது வருக தமிழனை தன்னோடும் தன்மானத்துடனும் கைஉயர்த்தும் பெருந்தகையே #கனடா_நாட்டின்_பிரதமர் உங்களை #தமிழ்நாடு பொருமையுடன் வரவேற்கிறது வருக வருக ஐயா #கனடாபிரதமர் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

    வாங்க பிரதமரே

    கனடா பிரதமரை வரவேற்றுள்ள இந்த வலைஞர் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பதிவிட்டுள்ளார். தமிழக தமிழக மக்களின் சார்பாக உங்களின் குடும்பத்தினரை வரவேற்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு ட்விட்டர்வாசி.

    மோடி வரவேற்பு

    மோடி வரவேற்பு

    பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது பிரதமர் மோடி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கனடா பிரதமரை கட்டிப்பிடித்து வரவேற்ற மோடி அவர் குடும்பத்தினருக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்தார்.

    English summary
    Canadian Prime Minister Justin Trudeau has visited in India. TamilNadu People welcome for Justin Trudeau the hashtag #Tamils4JustinTrudeau going to viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X