For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியபாண்டியனுக்கு வீரவணக்கம்... தமிழக வாழ்வுரிமை கட்சி இரங்கல்!

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ‘தீரன்‘ பெரியபாண்டியின் உடலுக்கு முதல்வர் அஞ்சலி- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டுவரும் வட மாநிலத்தவர், இன்று தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியையே சுட்டுக் கொன்றிருக்கின்றனர். பெரியபாண்டிக்கு வீரவணக்கம் செலுத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், இது போன்று இனி எப்போதுமே நிகழாதபடி தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : சென்னையை அடுத்த புழல், புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலையில் 'மகாலட்சுமி தங்க மாளிகை' என்ற நகைக்கடை வைத்திருப்பவர் முகேஷ்குமார்; வயது 37. கடந்த நவம்பர் 16ம் தேதியன்று பட்டப்பகலில் அந்தக் கடையின் மேல் தளத்தில் துளையிட்டு உள்ளே இறங்கிய 2 வட மாநில நபர்கள் நகைக்கடையில் இருந்த 3 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். மேல் தளக் கடையை ராஜேஷ் என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தார்.

    இந்தக் கொள்ளைக்குத் தொடர்புடையோரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மீதிப் பேர் ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்ட தகவலின் பேரில் அவர்களைப் பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மற்றும் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தலைமையிலான அந்த தனிப்படை ராஜஸ்தான் சென்றது.

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை

    அங்கு தினேஷ் மற்றும் சௌத்ரி ஆகிய கொள்ளையர் இருவர் பாலி மாவட்டம், ஜெய்த்ரான் காவல் எல்லைக்குட்பட்ட ராம்புர்கலான் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்து தனிப்படை அந்த வீட்டை சுற்றி வளைத்தது. ஆனால் கொள்ளையரின் துப்பாக்கிச் சூட்டில் பெரியபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். இதையடுத்து கொள்ளையரைப் பிடிக்க இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையில் தனிப்படை ராஜஸ்தான் விரைந்துள்ளது. 48 வயதான பெரியபாண்டி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்; அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்; ஒரு மகன் லயோலா கல்லூரியில் முதலாம் ஆண்டும், இன்னொரு மகன் எட்டாம் வகுப்பும் படிக்கின்றனர்.

    வெளி மாநிலத்தவரின் அட்டூழியங்கள்

    வெளி மாநிலத்தவரின் அட்டூழியங்கள்

    தமிழகத்திற்கு வந்துள்ள வட மாநிலத்தவர் கொலை, கொள்ளை மற்றும் சமூகவிரோத, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது. கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. கும்மிடிப்பூண்டியில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரையே சுட்டுக் கொன்றனர். வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட 5 கொள்ளையர் வேளச்சேரியில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு எதிர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

    அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்

    அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்

    சோழிங்கநல்லூரில் ஐ.டி துறை பெண் எஞ்சினியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கோவையிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு ரயிலின் ஒரு பெட்டி மேல்புறத்தில் துளையிடப்பட்டு வட மாநிலத்தவரால் கொள்ளையடிக்கப்பட்டது. எஞ்சினியரிங் கல்லூரியில் படிக்க வந்த வட மாநில மாணவர்கள் அவர்களுக்குள்ளாகவே சுட்டுக் கொண்டும் பலிகள் நடந்திருக்கின்றன. வட மாநிலத்திலிருந்து வந்து இங்கு தொழிலாளர்களாக இருப்போர் ஒருவரை ஒருவர் தாக்கி கொலையுண்ட சம்பவங்களும் உண்டு.

    வடமாநிலத்தவர்க்கு சாதாரணம்

    வடமாநிலத்தவர்க்கு சாதாரணம்

    இப்படி இந்தப் பட்டியல் மிக நீளமானது; கொலை, கொள்ளையில் ஈடுபடுவதென்பது இங்குள்ள வட மாநிலத்தவரைப் பொறுத்தவரையில் சர்வசாதாரணமான விடயம். அதனால்தான் அது தொடர் நிகழ்வாகிப் போனது. அப்படித்தான் இப்போது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

    ஆயுதச் சோதனை வேண்டும்

    ஆயுதச் சோதனை வேண்டும்

    வட மாநிலத்திலிருந்து தமிழகம் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே இவர்களை முறைப்படுத்த வேண்டியது அவசியம். அரசு இந்தப் பிரச்னையை கவனமாகக் கையாள வேண்டும். ஒவ்வொரு காவல்நிலைய எல்லைக்குள்ளும் இருக்கும் வட மாநிலத்தவரையும் கண்காணிக்கும் பொருட்டு அவர்களின் பெயர், முகவரி மற்றும் அங்க அடையாளப் பதிவு ஏற்படுத்தப்பட வேண்டும்; ஆயுதச் சோதனைகளும் செய்யப்பட வேண்டும்.

    அரச நடவடிக்கை வேண்டும்

    அரச நடவடிக்கை வேண்டும்

    புற்றீசல் போல் வந்து குவியும் வட மாநிலத்தவருக்கு இங்கு குடும்ப அட்டையோ, வாக்குரிமையோ வழங்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகளைப் பிடிக்க வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்போது, அதற்கென திட்டமிட்ட வழிமுறைகள் காவல்துறையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதைத்தான் பெரியபாண்டியின் கொலைச் சம்பவம் உணர்த்துகிறது. இதை காவல்துறையும் தமிழக அரசும் இணைந்து செய்ய வேண்டும்.

    முனிசேகருக்கும் நிவாரணம் வேண்டும்

    முனிசேகருக்கும் நிவாரணம் வேண்டும்

    உயிரிழந்த ஆய்வாளர் பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை வைத்தது அதனை நிறைவேற்றிய அரசுக்கு நன்றி. மேலும் ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்றும், காயமடைந்த ஆய்வாளர் முனிசேகர் அவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், அவருடன் பணியில் இருந்த காவலர்களுக்கு உரிய நிவாரண தொகை அளித்திட வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    ஆழ்ந்த இரங்கல்

    ஆழ்ந்த இரங்கல்

    பெரியபாண்டி கொலைதான் கடைசியாக இருக்க வேண்டும்; இனி அப்படியொரு நிகழ்வு நடக்கக்கூடாது என்கிற விதத்தில் தமிழக அரசு இந்த விவகாரத்தை அணுக வேண்டும்; அரசின் நடவடிக்கை இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைய வேண்டும். வீரச்சாவைத் தழுவிய பெரியபாண்டிக்கு வீரவணக்கம் செலுத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tamizhaga vazhvurimai party leader Velmurugan condoles for Periyapandi family and urges government to take immediate action to avoid this circumstances in future.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X