For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேச்சுவார்த்தை தோல்வி- வரும் 15-ல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் உறுதி- சிஐடியு சௌந்தரராஜன்

முன் கூட்டியே திட்டமிட்டிருந்தபடி வரும் 15ம் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகப் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் வரும் 15-ந் தேதி திட்டமிட்டபடி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு அரசு வழங்கவேண்டிய நிலுவை தொகைக்கென,அரசு ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி போதாது எனவும் கூறியுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து தமிழக அரசு உடனே ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Tamli nadu Transport workers strike begin coming 15th said by CITU GS Soundhrarajan

இது தொடர்பாக பேட்டியளித்த சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சௌந்திரராஜன் கூறுகையில், தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை வழங்கிய பிறகு ஊதிய உயர்வு பேச்சை தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி 15 ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும். வேலை நிறுத்தத்தை கைவிட அரசு சார்பில் எந்த உறுதியும் அளிக்கவில்லை. தமிழகத்தில் ஓடும் பேருந்துகளில் பாதி காலாவதியானவை. 22 ஆயிரம் அரசு பேருந்துகளில் 17 ஆயிரம் பேருந்துகள் ஓடத் தகுதியற்றவை' என்று தெரிவித்தார்.

English summary
Tamli nadu State Transport workers announce strike from 15th May onwards said by CITY General Secretary Soundararajan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X