For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழையின் போது ஏற்படும் மின் விபத்துகள்... இந்த எண்களுக்கு 'ட்ரிங், ட்ரிங்' பண்ணுங்க!

மழையின் போது மினதடை அல்லது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : மழைக்காலத்தில் மின்தடை ஏற்பட்டாலோ மின்பாதிப்புகள் ஏற்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அந்தந்த மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு முன்எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் இப்போது தான் தொடங்கியுள்ளன.

பொதுமக்கள் தங்களது சிரமங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போன்று மின்தடை மற்றும் மின்பாதிப்புகள் ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 மின்விபத்து புகார் எண்கள்

மின்விபத்து புகார் எண்கள்

மின்விபத்துகளை தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிக்கான மின் வாரிய பொறியாளர்கள், மேற்பார்வை மற்றும் செயற்பொறியாளர்களின் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 மேற்பார்வை பொறியாளர்கள் எண் வெளியீடு

மேற்பார்வை பொறியாளர்கள் எண் வெளியீடு

சென்னை தெற்கு மேற்பார்வை பொறியாளர் : 9445850111, சென்னை தெற்கு மேற்பார்வை பொறியாளர் 2 : 9445981258, சென்னை மத்திய மேற்பார்வை பொறியாளர் : 9445850707, சென்னை வடக்கு மேற்பார்வை பொறியாளர் : 9445850959, சென்னை மேற்கு மேற்பார்வை பொறியாளர் : 9445850300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

 தயார் நிலையில் ஊழியர்கள்

தயார் நிலையில் ஊழியர்கள்

மின்விபத்தை தடுக்க அதிகாரிகள் தலைமையில் வழக்கம்போல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்விபத்து தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமாகும் மின் கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும், தாழ்வான பகுதிகளில் தொங்கும் மின் வயர்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

மின்விநியோகம் தடைப்படாமல் இருக்க, ஊழியர்கள் யாரும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மின்சாதனங்கள் தயார் நிலையில் இருக்கும் வைக்கும்படி மண்டல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
TANGEDCO requests people to complain about electricity issues during rain and for the chennai and suburban areas supervising engineers numbers released for people welfare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X