For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுந்த மரங்கள்.. மின் கம்பங்கள்.. உதவிக்கு ஆள் இல்லை.. தாங்களே களமிறங்கிய தஞ்சை மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆயிரக்கணக்கானோர் மீட்பு முகாம்களில் தங்க வைப்பு | களத்தில் குதித்த இளைஞர்கள்- வீடியோ

    தஞ்சாவூர்: நாகப்பட்டனத்தைப் போலவே தஞ்சாவூரிலும் கஜா புயல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை நகரிலும், பல்வேறு சுற்றுப் பகுதிகளிலும் பெரும் பாதிப்பை மக்கள் சந்தித்துள்ளனர்.

    தஞ்சை நகரமே புயலால் புரட்டிப் போடப்பட்டுள்ளது. மின் கம்பங்கள், மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. விளம்பரப் பலகைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. பல்வேறு வாகனங்களும் கூட காற்றில் சேதமடைந்துள்ளன.

    வீடுகளில் மரங்கள் விழுந்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆசை ஆசையாக வளர்த்த மரங்கள் விழுந்ததால் மக்கள் சோகமடைந்துள்ளனர்.

    மீம்ஸ் போட்டு விளையாடாதீங்க.. எங்களை சீரியஸா எடுத்துக்கங்க.. கஜா கற்று கொடுத்து சென்ற பாடம்! மீம்ஸ் போட்டு விளையாடாதீங்க.. எங்களை சீரியஸா எடுத்துக்கங்க.. கஜா கற்று கொடுத்து சென்ற பாடம்!

    அம்மா வைத்த மரம் போச்சே

    அம்மா வைத்த மரம் போச்சே

    பல வீடுகளில் முருங்கை, வாழை மரம் உள்ளிட்டவை விழுந்துள்ளன. இதனால் அம்மா வைத்த மரம், தாத்தா வைத்த மரம் என்று பார்த்து பார்த்து மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

    பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

    பல இடங்களில், தெருக்களில் மரங்கள் விழுந்து அடைத்துக் கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய மரங்களை அப்புறப்படுத்த போதிய அளவில் ஆட்கள் இல்லாத நிலையும் காணப்படுகிறது.

    சிக்னல் போர்டுகள்

    சிக்னல் போர்டுகள்

    சாலைகளில் மின் கம்பங்கள் பெருமளவில் சாய்ந்துள்ளன. அதேபோல போக்குவரத்து சிக்னல் போர்டுகள், கம்பங்களும் கூட விழுந்துள்ளன.

    புரட்டிப் போட்ட புயல்

    புரட்டிப் போட்ட புயல்

    கஜா புயல் ஒட்டுமொத்த தஞ்சாவூரையும் புரட்டிப் போட்டுள்ளது. மொத்த நகரும் குப்பைக் கூளமாகியுள்ளது. பெரிய கோவில் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் மரம், மின் கம்பம், விளம்பரப் பலகை என விழுந்து கிடக்கிறது.

    ஆட்கள் தேவை

    ஆட்கள் தேவை

    விழுந்து கிடக்கும் மரங்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த போதிய ஆட்கள் இல்லாமல் தஞ்சாவூர் மாநகராட்சி ஊழியர்கள் தடுமாறி வருவதாக கூறப்படுகிறது. மருத்துவக் கல்லூரி சாலை, கோர்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன.

    படம் + தகவல்: தீபக் சங்கர், தஞ்சாவூர்.

    English summary
    Tanjore and its surroundings are bleeding after Cyclone Gaja hit the Temple city and people themselves removing the fallen trees and lamp posts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X