For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்னிந்தியாவை இலக்கு வைக்கும் பாகிஸ்தான்.. கொழும்பில் என்ன செய்தது ஐ.எஸ்.ஐ.? திடுக் தகவல்கள்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் இனமோதல்களை உருவாக்கி முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி தமது வலையில் விழ வைத்து அவர்களை தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான உளவாளிகளாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உருவாக்கி வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக உதவியுடன் தென்னிந்தியாவில் உளவு பார்த்ததாக அண்மையில் அருண் செல்வராசா என்பவன் சிக்கினான். அதேபோல் சாகிர் ஹூசேன் என்ற பாகிஸ்தான் உளவாளியும் பிடிபட்டான்.

Target South IndiaHow the ISI broke Colombo?

இந்த இருவரிடமும் தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றின் விவரம்:

  • இலங்கையில் உள்ள தீவிர பவுத்த பிக்குகள் இயக்கமான பொதுபல சேனாவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மறைமுகமாக உதவி செய்கிறது.
  • பொதுபல சேனா மூலமாக முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்த வைப்பது ஐ.எஸ்.ஐ. திட்டம். அப்படி முஸ்லிம்கள் தாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் போது தீவிரவாதத்தை நோக்கி தள்ளப்பட வேண்டும் என்பது ஐ.எஸ்.ஐ.நோக்கம்
  • இப்படி தங்களிடம் வந்து சேரும் இலங்கையர்களை வைத்து தென்னிந்தியாவில் வேவு பார்த்து, தாக்குதலுக்கு வியூகம் வகுப்பது என்பதுதான் ஐ.எஸ்.ஐ.-யின் திட்டம்.
  • பாகிஸ்தான் தூதரக அத்காரியான அமிர் சுபைர் சித்திக் என்பவர் தலைமையில்தான் இந்த சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • 2012 ஆம் அக்டோபர் மாதம் மொத்தம் 15 முதல் 50 வரையிலான உளவாளிகளை சித்திக் உருவாக்கியுள்ளார்.
  • இவர்களில் சிலர் தென்னிந்தியாவுக்குள் தாக்குதல் நடத்துவதற்காக வேவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
  • இஸ்ரேலிய தூதரகங்கள், தேசிய கமாண்டோ படை தலைமையகங்கள்தான் பாகிஸ்தானின் இலக்கு.
English summary
Arun Selvarajan and Sakir Hassan the two suspected ISI spies reveal a chilling tale of how the ISI benefitted from the various conflicts in Sri Lanka which made the job of setting up a Colombo module extremely easy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X