For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தனை கோடிக்கா குடிச்சாங்க.. பொங்கல் பண்டிகையில் சாதனை படைத்த டாஸ்மாக் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 220 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    டாஸ்மாக் பொங்கலுக்கு எடுத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா ?

    சென்னை: பொங்கல் பண்டிகையொட்டி இந்த ஆண்டு டாஸ்மாக்கில் 220 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது புத்தாண்டு விற்பனையைக் காட்டிலும் 15 கோடி அதிகம் ஆகும்.

    அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைகளிலும் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் வரையில் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    நாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் 80 கோடியில் இருந்து 100 கோடி வரையில் மது விற்பனையாகும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக மது விற்பனை நடக்கும்.

    அதனால் விஷேச நாட்களில் மட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டும் புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

     220 கோடிக்கு விற்பனை

    220 கோடிக்கு விற்பனை

    அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் மற்றும் போகி பண்டிகை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் 220 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது கடந்தாண்டு பொங்கலை விட 15 கோடி அதிகம் ஆகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இந்த ஆண்டு புத்தாண்டிற்கு 215 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     புத்தாண்டு இலக்கு பாதிப்பு

    புத்தாண்டு இலக்கு பாதிப்பு

    டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் ஏற்பட்ட பிரச்னையால் இந்த ஆண்டு புத்தாண்டின் போது டாஸ்மாக் நிர்வாகம் வைத்த இலக்கை அடைய முடியாமல் போனது. அதனால், இந்த ஆண்டு 195 கோடிக்கு மட்டுமே புத்தாண்டு சமயத்தில் மதுவிற்பனை நடந்தது. இது கடந்த ஆண்டை விட வெரும் 8 கோடி மட்டுமே அதிகம்.

     204 கோடிக்கு விற்பனை

    204 கோடிக்கு விற்பனை

    இந்நிலையில், இந்த ஆண்டு புத்தாண்டு மற்றும் கடந்த ஆண்டுகளை காட்டிலும் பொங்கல் பண்டிகையின் போது மது விற்பனை சாதனை படைத்து உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது 123 கோடிக்கு மது விற்பனை ஆகியது. அதே போல முந்தைய நாள் போகி பண்டியகையின் போது 81 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதனால், கடந்த வருடம் மொத்தம் 204 கோடிக்கு மட்டுமே மது விற்னையாகியது.

     மது விற்பனையில் சாதனை

    மது விற்பனையில் சாதனை

    ஆனால், இந்த வருடம் பொங்கல் தினத்தன்று 127 கோடியும், முந்தைய நாள் போகி அன்று 92 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 15 கோடி அதிகமாகும். டாஸ்மாக் கடைகளில் இந்த ஆண்டு பாட்டில் ஒன்றுக்கு 10 சதவிகிதம் விலை அதிகமாகியுள்ளது. இந்த விலை உயர்வால் புத்தாண்டின் போது மதுபானம் விற்பனை குறைந்திருந்தது. ஆனால், நேற்று திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய நாட்களில் குடிமகன்கள் அதிக அளவிலான பாட்டில்களை வாங்கி கையிருப்பில் வைத்துகொண்டனர். இதுவும், மதுவிற்பனை அதிகமானதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    TASMAC sales set record on Pongal festival. TASMAC officials says that the sales on Pongal day is 220 Crores and its 15 crore higher than the last Year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X