For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டர் சட்டம் ரத்தால் ஜாமின்.. ஹாசினியைக் கொன்றவன் எப்படி வெளியே வரலாம்.. மக்கள் கொந்தளிப்பு!

சிறுமி ஹாசினியைக் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளி தஷ்வந்த் எப்படி ஜாமினில் வெளி வர முடியும் என்று மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றவனுக்கு ஜாமீன்?-வீடியோ

    சென்னை : போரூர் அருகே சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞன் தஷ்வந்த் எப்படி ஜாமினில் வெளிவரமுடியும் என்று மக்கள் கொந்தளித்துள்ளனர்.

    போரூரை அடுத்த மாங்காடு மதனந்தபுரத்தில் வசித்து வரும் மென்பொறியாளர் பாபு என்பவரின் 7 வயது மகள் ஹாசினி கடந்த பிப்ரவரி 7ம் தேதி மாயமானார். இதனையடுத்த அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். விளையாட வெளியில் சென்ற குழந்தை மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக வந்த போது மாயமானாள்.

    இதனையடுத்து போலீசார் அக்கம்பக்கத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது ஹாசினி விளையாடிவிட்டு அபார்ட்மென்டிற்குள் வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் குழந்தை எங்கே போனது என்ற போலீசார் குழம்பிப் போயினர். ஆனால் இரவு 9 மணியளவில் இதே அபார்ட்மென்டில் வசிக்கும் இளைஞன் தஷ்வந்த், கையில் ஒரு பையுடன் சென்றுவிட்டு, அரை மணி நேரத்தில் வீடு திரும்புகையில் வெறும் கையுடன் வந்தது தெரிந்தது.

     ஹாசினி கொலை

    ஹாசினி கொலை

    இதனையடுத்து தஷ்வந்த்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவன் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளான். இறுதியில் ஹாசினியைக் கொன்ற குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டான். அதவும் அந்த குழந்தையை கொன்ற தஷ்யந்த் ஹாசினிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவள் கத்தியதையடுத்து தலையணையை வைத்து அழுத்தியதில் குழந்தை இறந்துள்ளது.

     சிறையில் தஷ்வந்த்

    சிறையில் தஷ்வந்த்

    இதனயைடுத்து இறந்த ஹாசினியை பையில் எடுத்துச் சென்று தாம்பரம்- மதுரவாயல் பைஸ் மேம்பாலம் அருகே எரித்துவிட்டு வந்துள்ளான். ஹாசினியின் பெற்றோர் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து பெற்றோரின் மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றவாளி தஷ்வந்த் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

     குண்டர் சட்டம்

    குண்டர் சட்டம்

    தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தஷ்வந்த் மீது சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அவருடைய தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

     குண்டாஸ் ரத்தால் ஜாமின்

    குண்டாஸ் ரத்தால் ஜாமின்

    இந்த வழக்கு விசாரணையின் போது போலீசார் குற்றத்தை நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக ஹைகோர்ட் அறிவித்தது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் தஷ்வந்திற்கு எளிதில் ஜாமின் கிடைத்துள்ளது.

    கொந்தளிப்பு

    கொந்தளிப்பு

    7 வயதில் துள்ளித் திறிந்த குழந்தை ஹாசினியை கொடூரமாக கொன்ற தஷ்வந்த்திற்கு ஜாமின் கிடைத்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய குழந்தையின் மரணத்திற்கு நீதிமன்றம் சொல்லும் நீதி என்ன என்று ஹாசினியின் தந்தை பாபு கண்ணீர் மல்க கேட்கும் கேள்வி தான், அனைவர் மனதிலும் எழுகிறது.

    English summary
    Tasvanth who killed 7 years old Hasini by sexually abused her killed and burnt got bail easily because of goondas act against hil quashed by Madras highcourt shocked not only Hasini's parents but also others.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X