For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு: சுங்கத் துறை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ள நிவராணமாக வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுங்க இலாகா முதன்மை ஆணையர் கே.ஆர்.என்.சாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

Tax exemption for imported relief materials

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்-மறுவாழ்வுக்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பொருட்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கக்கோரி ஏராளமான முறையீடுகள் பொதுமக்கள், அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வந்து கொண்டிருக்கிறது.

Tax exemption for imported relief materials

ஏற்கனவே இதுபோன்ற அமைப்புகளுக்கு ஏழைகள் பெறுவதற்காக பல நிபந்தனைகள் எனும் அடிப்படையில் உணவு, மருந்து-மாத்திரைகள், துணிமணிகள் போன்றவற்றிற்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிபந்தனைகள் அடிப்படையில் வராதவர்கள் 2014-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான படிவங்களை பெற மத்திய கலால் மற்றும் சுங்கவரி மத்திய போர்டு உறுப்பினர் (சுங்கம்), வடக்கு பிளாக், நியூடெல்லி 110001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை பெற விரும்புவோர் கீழ்க்கண்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்:-

சுங்க இலாகா முதன்மை ஆணையர் கே.ஆர்.என்.சாரி - 9445848899

விமான நிலைய கூடுதல் ஆணையர் டாக்டர் டி.டிஜ்ஜு - 8754551301, 7358044045

இணை ஆணையர்கள் எஸ்.பி.சிங் - 8220251073, வி.பி.ராவ் - 9789521852

உதவி ஆணையர் தங்கமணி (கப்பல் போக்குவரத்து) - 9443246440.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Customs department has announced that import of relief materials will not attract tax and customs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X