For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக தேர்தல் அறிக்கை.. நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை தரும் முக்கியமான ஒரு வாக்குறுதியும் இருக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Manifesto 2019: பல அறிவிப்புகளுடன் வெளியான பாஜகவின் தேர்தல் அறிக்கை - வீடியோ

    சென்னை: நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வருமான வரி விகிதங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    வரும் லோக்சபா தேர்தலையொட்டி பாஜக இன்று, தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, சமஸ்கிருதத்தை இந்தியா முழுமைக்கும் பள்ளிகள் அளவில் பரப்புவது, என்பது உள்ளிட்ட இந்துத்துவா வாக்குறுதிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன.

    அதேநேரம், தங்களது வாக்கு வங்கியாக பாஜக நம்பக்கூடிய, நடுத்தர மக்களை ஈர்ப்பதற்காக ஒரு முக்கியமான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    இன்னைக்கு வேணும்னா...பாஜக, காங். இலவசங்களை அறிவிக்கலாம்.. ஆனால் அதுக்கு விதை நாம போட்டது! இன்னைக்கு வேணும்னா...பாஜக, காங். இலவசங்களை அறிவிக்கலாம்.. ஆனால் அதுக்கு விதை நாம போட்டது!

    பட்ஜெட்டில் மாற்றம்

    பட்ஜெட்டில் மாற்றம்

    அதுபற்றிய ஒரு பார்வை இதோ: சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டில், வரி விகிதங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு பலன்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. இதே போன்று மீண்டும் வரி விதிப்புகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாங்கள் உறுதியாக உள்ளோம். இதன்மூலம் அதிகப்படியாக மக்கள் கையில் பணப்புழக்கம் இருக்கும் சூழ்நிலை உருவாக்கப்படும். மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு ஆகும்.

    வரிச்சுமை குறைப்பு

    வரிச்சுமை குறைப்பு

    எங்களின் திட்டத்தால், நடுத்தர வருவாய் பிரிவினர் மிகுந்த பலன் அடைவார்கள். நடுத்தர வருவாய் பிரிவு மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெற்று, மேலும் சிறப்பான வாழ்க்கையை நடத்துவதற்கு, தேவையான உதவிகளை பாஜக அரசு செய்யும். வரி வசூல் அளவை அதிகரிப்பது, அதேநேரம் வரிச்சுமையை குறைப்பது என்பது தான் பாஜகவின் அடிப்படை நோக்கம்.

    உள்கட்டமைப்பு மேம்பாடு

    உள்கட்டமைப்பு மேம்பாடு

    எனவேதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வரி அளவு என்பது 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் இது 10.1 சதவீதமாக இருந்தது. இவ்வாறு ஈட்டப்பட்ட அதிகப்படியான வரி வருவாய் என்பது, ஏழை மக்கள் நலனுக்காகவும், உள்கட்டமைப்புகளை உயர்த்துவதற்காகவும், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு செலவிடப்பட்டுள்ளது.

    வரி விலக்கு உச்சவரம்பு

    வரி விலக்கு உச்சவரம்பு

    எங்களது கொள்கையை அதே போன்று நாங்கள் தொடருவோம். வரிச்சுமையை குறைப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம், செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Prime Minister Narendra Modi's BJP promises to revise tax brackets to help the middle class if it is voted back to power in the national election starting Thursday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X