For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூணாறு நிலச்சரிவில் மாண்டுபோன உறவுகளுக்கு பெட்டிமுடியில் தோட்ட தொழிலாளர்கள் அஞ்சலி

Google Oneindia Tamil News

இடுக்கி: கேரளாவின் மூணாறு நிலச்சரிவில் சிக்கி மாண்டு போன தமிழ் உறவுகளுக்கு பெட்டிமுடியில் தோட்ட தொழிலாளர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

மூணாறு பெட்டிமுடியில் ஒரு வாரத்துக்கு முன்னர் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகளில் உறங்கிய தோட்ட தொழிலாளர்கள் அப்படியே மண்ணோடு மண்ணாக புதையுண்டு போயினர்.

Tea Estate Labourers Pay tribute to Kerala Landslide Victims

இவர்களில் பெரும்பாலானோர் தமிழக தோட்ட தொழிலாளர்கள். இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சியவர்களின் உடல்களையும் மீட்கும் பணி தொடருகிறது.

எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டால் தக்க பதிலடி கிடைக்கும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டால் தக்க பதிலடி கிடைக்கும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பெட்டிமுடி நிலச்சரிவு பகுதிகளை மாநில ஆளுநர்ர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் பெட்டிமுடி கூடாரவளை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவில் உயிரிழ்நதோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர்.

Tea Estate Labourers Pay tribute to Kerala Landslide Victims

பின்னர் ஊர்வலமாக சென்று உயிரிழந்தோருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, நாங்கள் ஐந்து தலைமுறைகளாக இங்கே இருக்கிறோம். வெட்ட வெட்ட தேயிலை கொளுந்துதான் வளர்ந்ததே ஒழிய. எங்கள் வாழ்க்கை தரம் இன்னும் வளரவில்லை என்று கண்ணீர்மல்க கூறினர்.

Tea Estate Labourers Pay tribute to Kerala Landslide Victims
English summary
Tea Estate Labourers Paid tribute to Kerala Landslide Victims on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X