For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

+ 2 விடைத்தாள் திருத்தம்: விரும்பும் மையம் தராவிட்டால் புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு!

Google Oneindia Tamil News

நெல்லை: விரும்பும் மையத்தை தேர்வு துறை அனுமதிக்காவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு செய்திருப்பதால் அரசு அதிர்ச்சியில் உள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. தேர்வு முடிந்வுடன் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி விடும். முதல் கட்டமாக மொழி தாள் திருத்தப்டும்.

பின்பு அடுத்த கட்டமாக பிற மொழி தாள்கள் திருத்தப்படும். இதற்காக தேர்வு துறையின் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கலவி அலுவலர்கள் முகாம் அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவர்.

Teachers override the plus 2 paper correction…

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதங்களில் பிளஸ்டூ விடைத்தாள் பணிகள் மாவட்ட வாரியாக நடந்தது. நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட மையம் நெல்லையிலும், தென்காசி கல்வி மாவட்ட மையம் தென்காசியிலும் அமைக்கப்பட்டது.

தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்கள் பெரும்பாலானோர் நெல்லையில் இருந்து தினமும் சென்று வருகின்றனர். இவர்கள் தினமும் 4 மணி நேரம் பேரூந்து பயணம் செய்வதால் டயர்டாகி விடுவதாக கூறப்படுகிறது.

இதனால் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணியை தங்கள் விரும்பும் மையத்தை தேர்வு செய்ய அரசு தேர்வு துறை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் நெல்லவை, சேரன்மகாதேவி, தென்காசி என கல்வி மாவட்டம் வாரியாக மையம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் தஙகள் விரும்பும் மையம் கிடைக்காவிட்டால் விடைத்தாள் திருத்த செல்ல போவதில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த முடிவால் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.

English summary
Tamil Nadu teachers committee planned to override the paper correction, if the government not gives their preferred place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X