For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர்களின் போராட்டத்திற்கு சிலரின் தூண்டுதலே காரணம்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்களின் போராட்டத்திற்கு சிலரின் தூண்டுதலே காரணம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : ஆசிரியர்களின் பிரச்னை விவகாரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடவேண்டும் என்றும், அதுகுறித்து ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாக தீர்வு காணப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களிடையே இருக்கும் ஊதியப் பாகுபாட்டை கலையக்கோரியும், ஏழாவது ஊதியகுழுவின் பரிந்துரையை அமல்படுத்தக்கோரியும் ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 ஆசிரியர்களுக்கான ஊதியம்

ஆசிரியர்களுக்கான ஊதியம்

அந்த அறிக்கையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு (சாதாரண நிலை) 6-வது ஊதியக் குழுவிற்கு முன்னர் 31.12.2005 வரை ரூ.4500 125 7000 என்ற ஊதிய விகிதம் நடைமுறையில் இருந்து வந்தது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசாணை எண்.234 நிதித் துறை, நாள் 1.6.2009ன்படி இடைநிலை ஆசிரியர்கள் (சாதாரண நிலை) ஊதிய விகிதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் 2800 என திருத்திய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு, 1.1.2006 முதல் கருத்தியலாகவும் 1.1.2007 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் ஆணைகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.500 சிறப்பு படி 1.8.2010 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

 வெளியிடப்பட்ட அரசாணை

வெளியிடப்பட்ட அரசாணை

பின்னர், சாதாரண நிலையில் ஊதிய விகிதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 1.8.2010 முதல் வழங்கப்படும் சிறப்பு படி ரூ.500-க்கு பதிலாக மாதம் ஒன்றிற்கு ரூ.750 ஆக உயர்த்தி தனி ஊதியமாக வழங்கி அரசாணை எண்.23 (நிதி ஊதியப் பிரிவுத்துறை) நாள் 12.1.2011 -ன்படி ஆணையிடப்பட்டது. இத்தனி ஊதியம் ரூ.750 ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்திற்கு கணக்கில் கொள்ளப்படும் என ஆணைகள் வழங்கப்பட்டும், தனி ஊதியம் 1.1.2011 முதல் பெறும் வகையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 அரசுக்கு நிதிச்சுமை

அரசுக்கு நிதிச்சுமை

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ரூ.20,600 - 65,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தனி ஊதியம் ரூ.750, ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஜெயலலிதாவின் அரசு அமல்படுத்தியதன் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 14,719 கோடி ரூபாய் அளவிற்கு இந்த அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது. இருப்பினும், பல்வேறு தரப்பு ஊழியர்களின் நலன் கருதி ஜெயலலிதா அரசு இதனை ஏற்றுக்கொண்டது. அதோடு மட்டுமின்றி, இந்த பரிந்துரைகளை அமல்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு ஒருநபர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

 ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் போராட்டம்

இக்குழுவின் பரிந்துரையால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய இயலும். மேலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் பிறருடைய தூண்டுதலின் பேரில் 23.4.2018 முதல் எந்த வித முன்னறிவிப்போ, அனுமதியோ இல்லாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

 உண்ணாவிரதப் போராட்டம்

உண்ணாவிரதப் போராட்டம்

இந்த விவகாரத்தில், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளரும், அமைச்சரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேசிய பின்பும், தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த பிரச்சினைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாக தீர்வு காண வேண்டப்படுகிறது. எனது இந்த கோரிக்கையினை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Teachers Should Revoke the Protest says Sengottaiyan. School Education Minister Sengottaiyan Says that, the Government will look into Teachers Protest and issue will be solved soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X