For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலாவை வெளியே வராமல் தடுத்தது ஈபிஎஸ் அணியின் அதிரடி மனு

சசிகலாவின் லீவ் மனுவை கர்நாடகா சிறைத்துறை நிராகரிக்க ஈபிஎஸ் அணி தந்த அதிரடி மனுவும் ஒரு காரணம் என்கிறது கர்நாடகா போலீஸ் வட்டாரங்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சசிகலா 15 நாட்கள் லீவில் வெளியே வர வாய்ப்பு, ஈபிஎஸ் அணி ஆட்சேபம்-வீடியோ

    பெங்களூரு: சசிகலாவின் லீவ் மனுவை கர்நாடகா சிறைத்துறை நிராகரித்திருக்கிறது. பெங்களூரு சிறை அதிகாரிகளிடம் ஈபிஎஸ் அணி அதிரடியாக அளித்த மனுவும் இதற்கு காரணமாம்.

    மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கணவர் நடராஜனை பார்க்க லீவ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் சசிகலா. ஆனால் சசிகலா மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

    சசி லீவுக்கு எதிராக மனு

    சசி லீவுக்கு எதிராக மனு

    இதையடுத்து வரும் 5-ந் தேதியன்று சசிகலா சென்னை வர உள்ளதாக அவரது உறவினர் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே சசிகலாவை லீவில் வெளியிட ஆட்சேபித்து ஈபிஎஸ் அணி தரப்பில் பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் அதிரடியாக ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விசாரிக்க வலியுறுத்தல்

    விசாரிக்க வலியுறுத்தல்

    அதில், சசிகலா நடராஜன் என்ற பெயரை அண்மையில் விவேகானந்தன் சசிகலா என கெஜட்டில் மாற்றியவர் சசிகலா. அந்த கெஜட்டில் கணவர் நடராஜன் என்பதை நிராகரிக்கும் வகையிலேயே விவேகானந்தன் சசிகலா என பெயர் மாற்றினார்.

    கெஜட்டில் கணவர் பெயரை மறைத்தாரா?

    கெஜட்டில் கணவர் பெயரை மறைத்தாரா?

    இப்போது திடீரென கணவர் நடராஜனுக்கு உடல்நிலை சரியில்லை என லீவ் கேட்கிறார். விவேகானந்தன் சசிகலா என பெயர் மாற்றியது ஏன்? அந்த கெஜட்டில் கணவர் நடராஜன் குறித்த விவரங்களை தெரிவிக்காமல் விட்டது ஏன்? என உரிய விசாரணை நடத்திய பின்னரே சசிகலாவுக்கு லீவ் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

    சசி லீவ் மனு நிராகரிப்பு

    சசி லீவ் மனு நிராகரிப்பு

    இதனால் சசிகலாவின் லீவ் மனுவை கர்நாடகா போலீஸ் ஏற்பதில் நெருக்கடி ஏற்பட்டது. கடைசியாக சசிகலாவின் லீவ் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இது ஈபிஎஸ் அணியை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Sources said that AIADMK's Team EPS objection over the leave grant for Sasikala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X