For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடரும் தனி ஆவர்த்தனம்... உளவுத்துறை கண்காணிப்பால் ஓபிஎஸ் அணி அதிருப்தி?

ஈபிஎஸ் அணி தனி ஆவர்த்தனம் வாசிக்கும் நிலையில் உளவுத்துறை தங்களை கண்காணிப்பதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அணிகள் இணைந்த நிலையிலும் ஓபிஎஸ் தரப்பை தீவிரமாக ஈபிஎஸ் அணி கண்காணிப்பது கடும் புகைச்சலை கிளப்பியுள்ளதாம்.

தினகரனை ஓரம்கட்டி அதிமுகவை தம் வசமாக்கியது எடப்பாடி தரப்பு. இதே பாணியில் ஓபிஎஸ்ஸை உள்ளே இழுத்து அதிமுகவை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது எடப்பாடி தரப்பு.

நம்பிக்கை வீண்

நம்பிக்கை வீண்

எடப்பாடி தரப்புக்கு இணையாக இருப்போம் என நம்பியது ஓபிஎஸ் அணி. ஆனால் அதற்கு சிறு இடம்கூட தரப் போவதில்லை என்பதில் எடப்பாடி தரப்பு மிக உறுதியாக உள்ளது.

ஈபிஎஸ் அணியுடன் முட்டல்

ஈபிஎஸ் அணியுடன் முட்டல்

இதில் அதிருப்தியுடன் முட்டி மோதி பார்த்து கொண்டிருக்கிறது ஓபிஎஸ் அணி. இதற்காகத்தான் ஓபிஎஸ் டெல்லிக்கும் போய்விட்டு வந்தார்.

தொலைபேசி எண்களும் கண்காணிப்பு

தொலைபேசி எண்களும் கண்காணிப்பு

இந்த டெல்லி பயணத்துக்குப் பின்னர் ஓபிஎஸ் அணியை முழு வீச்சில் கண்காணிக்க தொடங்கியுள்ளது ஈபிஎஸ் தரப்பு. ஓபிஎஸ் அணியின் அனைத்து தொலைபேசி எண்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த தர்மயுத்தம்

அடுத்த தர்மயுத்தம்

இதை விரக்தியுடன் எதிர்கொண்டு வருகிறது ஓபிஎஸ் அணி. இந்த கண்காணிப்பு விவகாரமும் அடுத்த தர்மயுத்தத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

English summary
Team OPS leaders very disappointed over the EPS Camp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X