For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் கோளாறு... சென்னை ரயில்கள் தாமதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: செங்கல்பட்டு அருகே பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

மதுரையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் செங்கல்பட்டு அருகே வந்தபோது என்ஜின் கோளாறு ஏற்பட்டது.

Technical snag stops Pandian Express, Chennai bound trains running late

இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று என்ஜின் கோளாறை சரி செய்து வருகின்றனர்.

இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் நெல்லை, ராமேஸ்வரம், மன்னார்குடி ரயில்களுக்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

English summary
Engine snag stopped Pandian Express train near Chengalpattu this morning. All the Chennai bound trains are running late due to this snag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X