For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்டையைப் பிளக்கும் வெயில்.. 10 மாவட்டங்கள் உட்பட 12 இடங்களில் 100ஐத் தாண்டி அதகளம்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் 10 மாவட்டங்கள் உட்பட 12 இடங்களில் சதமடித்தது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் 10 மாவட்டங்கள் உட்பட 12 இடங்களில் சதமடித்தது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

Temperature hits 100 Fahrenheit in 12 places of Tamil Nadu

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்நிலையில் இன்று 10 மாவட்டங்கள் உட்பட 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

அதிகளவாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் தஞ்சாவூரில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சேலத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் காய்ந்துள்ளது.

அடுத்தபடியாக திருச்சி, நெல்லை, ஏலகிரி, வேடந்தாங்கல் ஆகிய இடங்களில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதைத்தொடர்ந்து திண்டுக்கல், ஈரோடு, மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 100.4 டிகிரி பாரன்ஹீட்டாக வெயில் பதிவானது.

வானிலை குறித்த கூடுதல் செய்திகளை படிக்க..

English summary
Temperature hits 100 Fahrenheit in 12 places of Tamil Nadu. Due to this temperature people could not come out from houses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X